Header Ads



நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம்

எம்.ஹபீஸ்

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரை எமது நாட்டில் 28083 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் இனம் காணப்படாத இன்னும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பேராதெனிய சிரிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்திய சாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் எம்.ஏ.எம். பைசால் தெரிவித்தார்.
 
கண்டி பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர்களுக்கான  டெங்கு நோய் தொடர்பான செயலமர்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். அக்குறணை செனல் சென்டர் மருத்துவ மனையில் இக் கூடடம் இடம் பெற்றது. இங்கு மேலும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
 
நோயால் தமது குழந்தைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர்கள் பாரிய பங்களிப்புச் செய்யவேண்டியுள்ளது. 
 
டெங்கு நோய் எமது நாட்டுக்கு மட்டுமோ அல்லது நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமோ மட்டுப்படுத்தப்பட்ட நோயல்ல. அது  பல்வேறு உலக நாடுகளை பாதித்த ஒரு ஆட்கொள்ளி நோயாகும். ஆனால் எமது நாடு டெங்கு நோயை கட்டுப் படுத்துவதில் தேர்ச்சி பெற்றுள்ளமை இங்கு குறிப்பிட தக்கதாகும். அண்மையில் பாகிஸ்தானில் இந்நோய் பரவிய போது அவர்களுக்கான பயிற்யை வழங்க இலங்கை முன் வந்தது.
 
இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரை எமது நாட்டில் 28083 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாத இன்னும் பல்லாயிரம் நோயாளர்கள் இருப்பதற்கு வாய்ப்பபுண்டு.

1996 ம் ஆண்டு  1294 டெங்கு நோயாளர்கள் மட்டும் அடையாளம் காணப்பட்ட போதும் 2004ம் ஆண்டில் 15,263 மாக அது உயர்ந்து கணப்பட்டது.
 
டெங்கு நோயின் அறிகுறிகள் பலதரப்பட்டிருக்கும். சில வேலைகளில் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை நடாத்திவிட்டு டெங்கு நோய் இல்லை என்று சில வைத்தியர்கள் கூட தீர்மானிக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். டெங்கு நோயைத்  தீர்மானிப்பதற்கு இரத்த பரிசோதனைகள் பல நடாத்தப்பட வேண்டும்.
 
 முதலாவது பரிசோதனையில் சாதாரணமாக அறியப்படும் தகவல்கள் அடுத்த பரிசோதனையில் மாற்றமடையலாம். இதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு. டெங்கு நோயின் பிரதான அறிகுறியாக கடும் காய்ச்சல் காணப்படும். ஆனால் காய்ச்சல் இல்லாமலும் டெங்கு நோய் வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
டெங்கு நோய் அதிகமாக சிறு குழந்தைகளையே பாதிக்கின்து. டெங்கு நோய் என சந்தேகிக்கப்படும் நோயாளி; கட்டாயமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். வைத்தியர்களின் குழந்தைகளாக இருந்தாலும் வீட்டில் வைத்து மருத்துவம் செய்யக் கூடாது. அவர்களுக்கு ஓய்வு மிக முக்கியம். பாடசாலைக்கு அனுப்பக் கூடாது. சில பெற்றோர்கள் கல்வி முக்கிம் எனக் கருதி அதைக் கைவிட முடியாது எனக் கூறுகின்றனர்.
 
கல்வியை விட உயிர் முக்கியம் என்பதை நாம்  விளங்க வேண்டும்.  குழந்தைகளுக்கு பெரசிடமோல் மாத்திரையை அல்லது பாணத்தை ஏற்ற அளவிலேயே கொடுக்க வேண்டும். அதிகமான குழந்தைகளுக்கு பெரசிடமோல் அளவுக்கு அதிகமாக கொடுப்பாதால் பல சிக்கல்கள்  உறுவாகின்றன என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

 
 
 

No comments

Powered by Blogger.