கிளிநொச்சியில் சந்தை தொகுதி (படங்கள் இணைப்பு)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
கிளிநொச்சி சந்தை தொகுதியின் முதலாம் கட்ட நிர்மாண பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அதனை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மரக்கறி கடைத்தொகுதி, மீன் கடைத்தொகுதி என்பனவும் இக்கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் சந்தை தொகுதிக்கான நீர் வழங்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளை மிக விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சு ரமேஷ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீநிவாசன், கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிராந்திய ஆணையாளர் எஸ்.பத்மநாதன், பிரதி பிரதம செயலாளர்(நிதி) ஏ.மனோரஞ்சன் மற்றும் கிளிநொச்சி வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோர்களும் இதில் பிரசன்னமாகியிருந்தனர்.



Post a Comment