Header Ads



மாலி நாட்டில் பலம்பெறும் இஸ்லாமிய குழு

 
மாலி இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு மத்திய நகரான டவன்சாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் அந்த கிளர்ச்சிக் குழு நாட்டின் வடக்கில் தனது ஆதிக்கத்திலுள்ள பகுதியை விஸ்தரித்துக் கொண்டுள்ளது.
 
யுத்த ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த டவன்சாவின் தற்பாதுகாப்பு இராணுவம் தனது நிலைகளில் இருந்து வாபஸ் பெற்றதை அடுத்து ஜிஹாத் குழு அங்கு தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியதாக அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் தற்போது அரசு கட்டுப்பாட்டிலுள்ள நாட்டின் தென் மேற்கு பகுதியை நெருங்கியுள்ளனர்.
 
மாலியில் கடந்த மார்ச் மாதம் இராணுவ கிளர்ச்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டதை அடுத்து இஸ்லாமிய குழு நாட்டின் தென் பகுதி முழுவதையும் கைப்பற்றிக்கொண்டது.
 
மாலி தலைநகர் பமாகோவில் இருந்து வட கிழக்காக 800 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் டவன்சாவுக்கு கடந்த சனிக்கிழமை காலை ஆயுதமேந்திய வாகனத் தொடரணிகளில் தாடி வைத்த ஆண்கள் வந்திறங்கி யதாக அங்கிருக்கும் குடியி ருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தாம் நகரை சுற்றி வளைத்திருப் பதாகவும் எஞ்சியிருக்கும் இராணுவத்தினருக்கு சரணடையுமாறு எச்சரித்திருப்பதாகவும் மேற்படி இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவர் ஒமர் அவுட் ஹமஹா ஏ. பி. செய்திச்சேவைக்கு குறிப்பிட்டார்.
 
ஏற்கனவே மத சார்பற்ற துராக் கிளர்ச்சியாளர்களும், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களும் இணைந்தே மாலியின் வட பகுதி முழுவதையும் கைப்பற்றினர். ஆனால் இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து பெரும்பகுதி இஸ்லாமிய குழுவிடம் வீழ்ந்தது. இந்த இஸ்லாமிய குழு அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்டது என கூறப்பட்டுள்ளது. tn
 

No comments

Powered by Blogger.