Header Ads



உலகில் அமெரிக்காவுக்கு மதிப்பு இல்லையாம்..!

சிரியா மற்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்த மிட் ரோம்னி (அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்) தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜான் பெய்டன் குற்றம் சாட்டியுள்ளார். விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பெய்டன் கூறுகையில்,
 
"இராக் நாட்டின் மீதான சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்து அமெரிக்க வீரர்களை திரும்ப அழைத்ததை ரோம்னி தவறு என்கிறார். அதேபோல், ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் திரும்புவதற்கு நிர்ணயித்த காலஅளவையும் குறை கூறுகிறார். ரோம்னியின் பேச்சைப் பார்த்தால், ஈரான் மற்றும் சிரியா நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பது போல் உள்ளது' என்றார்.
 
ரோம்னி பதில்: பெய்டன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக ரோம்னி தேர்தல் பிரசாரக் குழுவினர் பதில் தெரிவித்துள்ளனர். "கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் முக்கியமான வெளியுறவுக் கொள்கைகளை விமர்சனம் செய்து வருபவர் பெய்டன். சர்வதேச அளவில் அமெரிக்காவை முதலிடத்துக்குக் கொண்டு வர ரோம்னி முன்னெடுக்கும் கொள்கைகளை பெய்டன் குறைகாண்பது ஆச்சரியமளிக்கவில்லை.
 
ஒபாமா நிர்வாகம், பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கத் தவறியதால் வெளிநாடுகளில் அமெரிக்காவின் மதிப்பு சரிந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு இருந்த மதிப்பு இப்போது உலகில் எப்பகுதியிலும் இல்லை' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.