பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கல பதக்கம் (படம் இணைப்பு)
லண்டன் பாராலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் சஞ்ஜெய வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ரி46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் கலந்து கொண்டார். இதில் பிரதீப் ஓட்ட பந்தய தூரத்தை 49.82 விநாடிகளில் ஓடி முடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.


conguratulation
ReplyDelete