Header Ads



வெள்ளக்கடற்கரை மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வு (படங்கள்)

பா.சிகான்
 
வேலணை சாட்டி வெள்ளக்கடற்கரை பிரதேசத்தில் உள்ள மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசல்  கொடியேற்ற நிகழ்வு நேற்று(05.9.2012) மாலை மஃரீப் தொழுகையின் பின்னர் யாழ் முஸ்லீம்களால் கோலாகலமாக  ஆரம்பமாகியது.
சுமார் 22 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில்  பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.

12 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ள நிகழ்வின் இறுதியாக கந்தூரி(அன்னதானம்)வழங்கும் வைபவமும் இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொடியேற்ற நிகழ்வுக்கு முன்னர் மௌலவி பலாஹிர் தலைமையில் துஆ பிராத்தினை மேற்கொள்ளப்பட்டதுடன் தொழுகையும் நடைபெற்றது.

இப்பள்ளிவாசல் ஹிஜ்ரீ 1386 தொடக்கம் கி.பி 1966 பிற்பட்ட கால பகுதியில் ஷெய்கு சுல்தான்அப்துல் காதீர் வொலீயுல்லாஹ் றழி அவர்களின் விஜயத்தின் பின்னர் அடக்கம் பெற்றமையினால் இது புனித தலமான பேணப்படுகிறது.
 














 

16 comments:

  1. மிக,மிக சந்தோசமான செய்தி.கேட்க,படங்களைப் பார்க்க புல்லரிகிறது.அனாசாரங்களையும்,பித்ததுகளையும் வளர்ப்பதற்கு மார்க்கம் தெரிந்த முல்லா பலாகிர் தலைமை.மடமையின் உச்சக்கட்டமா?மார்க்கத்தின் பேரை சொல்லி
    வயிறு வளப்பவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.காசு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது
    என்று தடுமாறும் முதலாளிமார்களே இது வீண் விரயமென்று தெரியவில்லையா? உங்களுக்கு தெரியும் ஆனால் மார்க்க வியாபாரிகள் உங்கள் காசு மேசையில் வெள்ளி இரவுகளில் பாத்திகா ஓதிஉங்களிடம் பிச்சை எடுத்து இதுதான்
    இஸ்லாம் என்று உங்கள் மூளையை கழுவி வைத்து விட்டார்களே. உண்மையான மார்க்கம் தெரிந்தவர்களை உங்கள் ஆலோசகர்களாக ஏற்று தவ்பா செய்து முழுமையாக இஸ்லாத்திற்குள் நுழைந்து விடுங்கள்.
    யாழில் தவ்ஹீத்(ஓரிறைக் கொள்கை) வந்தால் தங்கள் பிழைப்பு கெட்டு விடும் என்ற பரந்த நோக்கமுடையவர்கள்
    தான் நிறைந்து இருக்கிறார்கள்.அடித்துடைத்த கபுறை ஏன் கட்டாமல் பச்சையால் போத்தி அவ்லியாவின் மனதை
    புண்படுத்துகிறீர்கள்.அவ்லியா யாராவது காசுக்காரனுடைய கனவில் வந்து ஏன் இவ்வளவு காலமும் கொடிஎற்றவில்லை சொல்லியிருப்பார்போலும்.இறந்து போனவர்களிடம் கையேந்தாதீர்கள் என்று தெளிவான சான்றுகள் இருந்தும் என்ன பைத்தியக்காரத்தனமோ.இதிலிருந்து தெரிவது தொப்பி, தாடி,ஜுப்பா என்று வேஷம் போடுபவர்கள் எல்லாம் முஸ்லிமாகவோ,முமீனாகவோ ஆக முடியாது

    இப்படி பொருளாதாரத்தை வீணடிப்பதை விட நாலு குடும்பத்துக்கு சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாலே மீள் குடியேற்றத்தின் பயனையாவது கிடைத்திருக்கும்.வாழ் நாள் முழுவதும் யாழில் குடியேறியவர்களை கையேந்துபவர்களாகவே வைத்திருப்பதில் யாருக்கு என்ன இலாபமோ.கொடியேற்றி சோறு போடுகிறார்களாம்.தொடர்ந்து ஹஜ்ஜு குர்பான் பிச்சை, மீண்டும் நபியின் பெயரால் மொவ்லுது பிச்சை.இதெல்லாம் ஏன் செய்கிறோம் தெரியுமா,யாழ் மண்ணின் உரிமையை நிலை நாட்டவாம்.சிலுவை சுமப்பவனுக்கும்,ஸ்வத்திக்சின்னம் சுமப்பவனுக்கும்,கொடி ஏற்றத்திற்கும் என்ன வித்தியாசம்.மாற்று மதத்தவர்கள்
    நிற்க வைத்து கும்பிடுகிறார்கள்( நாங்கள் அல்ல)நீங்கள் படுக்க வைத்து கும்பிடுகிறீர்கள். .
    அந்த பச்சை துண்டை கொண்டு வருபவரின் முகத்திலுள்ள சந்தோசத்தை பார்த்தாலே அவர் பிறந்த பயனை
    அடைந்து விட்டது போல் தெரியவில்லையா?அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி
    யாருடைய முகத்திலாவது தெரிகிறதா?
    கடைசியாக இந்த விமர்சனத்தை படிப்பவர்கள் இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு அறிவித்து உடனடியாக இந்த முட்டாள் தனத்தை நிற்பாட்டி நன்மையை தேடிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. யாழ் முஸ்லிம்களின் மதபக்தியைப் பார்க்கும் போது பெருமை அடைகிறேன். அவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ்வின் அருள்
    கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. ithu enna islam ?ippa islathukku muranana vidayankalukkum jaffna muslim munnurimai kodikinratha???

    ReplyDelete
  4. KUFFAAR KHAALIDEENA NAARIJEHANNAMA FIIHAA ABADAA BIDAA KUFR LULUMAAT OH HO WHERE ARE THOSE REAL MUSLIM TEACH THEM ABOUT ALLAH AND THAUHEED

    ReplyDelete
  5. இதென்னடா அப்பு சனியன் பிடிச்ச வேலை?

    சொனகருக்கு தங்கட கடவுள் யாரெண்டே தெரியாமல் போட்டுது.

    யாழ்ப்பாணத்துச் சோனகரை ரண்டு மணித்தியாலத்திலை இல்லை, ரண்டு நிமிசத்திலை அடிச்சு துரத்தினாலும் திருந்த மாட்டினமோ?

    ReplyDelete
  6. உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்.

    அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456

    ReplyDelete
  7. நிலவைக் கன்டு பைத்திய
    நாய் குரைப்பது போலே ரவுப் ஹக்கீமைக் கன்டு i***m என்பவர் வல் வல்
    என்ட்ரு கத்திக் கொன்டு
    இருந்தார். இவருக்கு மூளை இல்லை என்ரு இப்பொலுது வெலிக்காட்டி விட்டார்.

    அல்லவுக்கு இனை
    வைப்பதை மூலை உல்ல முஸ்லிம் சரி
    என்ரு சொல்வானா?

    ReplyDelete
  8. யாழ் முஸ்லிம்கல் பல ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். யாழ்ப்பாணத்தில் எவ்வளவு தூரம் இஸ்லாத்தை பரப்புவார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது. அழிந்து விட்ட சமூகங்களில் நீங்களும் ஒன்றாக மாறிவிடப்போரீர்களா யாழ் முஸ்லிம்களே?

    ReplyDelete
  9. 30:40]
    அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.

    ReplyDelete
  10. pls don't do it.do the good job

    ReplyDelete
  11. ohhh jaffnamuslim.com pls don't publish this. this is against Islam.

    ReplyDelete
  12. யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் முட்டாள் தனமான செயல் இது. இரு தசாப்த காலத்தில் மார்க்கத்தை பற்றிய நல் அறிவு படைத்த பலர் இன்று உருவாகி இருக்கிறார்கள். சுபியான் மௌலவியின் தலைமையில் இயங்கும் யாழ் கிளிநொச்சி உலமா சபை, பைசர் மதனியை ஜும்மாவில் களமிறக்கிய புதுப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் ஜனாப் முபீன் அவர்கள் மற்றும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் போன்றவர்கள் முன்வந்து ஒற்றுமைப்பட்டு இந்த பித்ஆ வை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது நிச்சயமாக வழிகேட்டில் கொண்டு போய் விடும். அல்லாஹ்வுக்காக இந்த oil lamp வைத்து செய்யும் பூஜையை நிறுத்தி விடுங்கள் என இதன் ஏற்பாட்டாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  13. @Saudi Arabia,

    உங்கள் ஆதங்கம் புரிகின்றது, எனினும் யாழ் முஸ்லிம்கள் என்று மொத்தமாக குறை சொல்ல வேண்டாம். யாழ்ப்பாண முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள், சத்தியத்தை உணர்ந்து மாறி விட்டார்கள்.

    இன்னொரு பகுதியினர், உண்மை இன்னதுதான் என்று தெரிந்தாலும், அதில் உறுதியற்று சேற்றில் நாட்டிய கம்பு போல இருக்கின்றார்கள்.
    இவ்வாறு உறுதியற்று இருப்பவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு குறிப்பிட வழிகெட்ட சிலர், தமது பண, ரவுடிச வலிமைகளை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறான மார்க்க முரண் செயல்களை அரங்கேற்றுகின்றனர்.

    பணத்துக்காக கந்த சஷ்டி விரதத்தைக் கூட சரிகாணத் தயங்காத பெயரளவு மெளலவிகள் இருக்கும் நிலையில், இது போன்ற
    அனாச்சாரங்களை அரங்கேற்ற ஒரு லேப்பைக்காரன் கிடைக்காமலா போகப் போகின்றான்.

    இதனை யாழ்ப்பாண மொத்த முஸ்லிம்களின் செயலாகப் பார்ப்பது தவறு. இங்கு கருதப்படக் வேண்டிய இன்னுமொரு விடயம்
    என்னவென்றால், மார்க்கத்தை சரியாக விளங்கிய யாழ்ப்பாண முஸ்லிம்களில் பெறும் பகுதியினர், பல்வேறு தேவைகள் காரணமாக இன்னுமும் மீள் குடியேறச் செல்லவில்லை என்பதாகும்.

    யாழ்ப்பாணத்தில் சத்திய மார்க்கத்தின் பிரச்சாரம் பல்வேறு எதிர்ப்புகள், சதிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது என்று அறிய முடிகின்றது. இன்ஷா அல்லாஹ், அது வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  14. சகோதரர் Naswath அவர்களே, இந்த செயல் இஸ்லாத்துக்கு எதிரானது தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், யாழ்.முஸ்லிம் இதனைப் பிரசுரிக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது சரியல்ல.

    ஈராக்கில் நடைபெறும் குண்டுவெடிப்புகளும், சிரியாவில் பசீர் அல் அஸத்தின் படைகள் மேற்கொள்ளும் படுகொலைகளும் கூட
    இஸ்லாத்திற்கு விரோதமானவை. எனினும், ஊடகங்கள் உண்மையை வெளிக்கொணர்வதன் மூலமே உலகம் மேற்படி கொடூரங்களை உணர்ந்து கொள்கின்றது. ஊடகம் என்ற வகையில் இவ்விடையத்தில் யாழ்.முஸ்லிம் தனது பணியை சரியாகத்தான் செய்துள்ளது.


    யாழ்ப்பாணத்தில், இன்னுமும் திருந்தாத உள்ளங்கள் வாழ்ந்துகொண்டு இருகின்றன என்ற கவலையான செய்தி, சத்தியத்தின் அழைப்புப் பணியை இன்னுமும் விரிவாக செய்யும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க, வெளியூர்களில், வெளிநாடுகளில் உள்ள சகோதரர்களைத் தூண்டும், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  15. இந்த வழிகேட்டை மீண்டும் தொடங்கி வைத்துள்ளவர் முபீனின் தம்பி மிஹ்ளார் ஆவார். அவருக்கு உதவியாளராக உள்ளவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேர் ஏனையோர் வெளியூரைச் சேர்ந்தவர்கள். கொடியை ஏற்றுவதால் என்ன நடந்து விடப் போகிறது. கபுருக்கு மேல் போர்வை போர்த்துவதால் என்ன நன்மை. இதுவெல்லாம் இஸ்லாம் காட்டித் தந்த வழிமுறைகளா. யாழ்ப்பாணத்தின் புதைந்து போன மூடப் பழக்க வழக்கங்களை தூசு தட்டி புத்துயிர் அளிப்பதால் இவர்களுக்கு சொர்க்கம் தருவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான. அல்லது அந்த அப்துல் காதர் வலியுல்லா தான் சொன்னார்களா. இவர்கள் ஒரு வலி என்று அல்லாஹ் யாருக்காவது சொன்னனா. நபி காலத்தில் நபியை கண்ணால் கண்டு வாழத இவருக்கு எப்படி ரலியள்ளஹு அன்ஹு பட்டம். இதையெல்லாம் யார் கொடுத்தது.
    யாழ்பாணத்தில் வாழும் ஆயிரத்தி எழுநூறு முஸ்லிம்களில் வெறும் பத்து பேரே இந்த வழிகேட்டில் கலந்து கொண்டுள்ளனர். முன்னொரு காலத்தில் முழு ஊருமே கலந்து கொண்டது. இப்போது அது பத்தாகியுள்ளது . இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் யாருமே கலந்து கொள்ளாத ஒரு யுகம் வரும். அதனை ஒழித்துக் கட்ட யாழ்ப்பான தப்லீக் ஜமாஅத் தயார். நீங்கள் தயாரா. ?
    மிஹ்லருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் அல்லாஹு தஆளா ஹிதாயத்தை கொடுப்பானாக.

    ReplyDelete
  16. அபு ஆமித்,பிதுஅத்,இன்னும் பல குழப்பங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட நபர்களும் காரணம்.சுய நலம்,அரசியல் சித்து விளையாட்டுத்தான் யாழ் சோனக தெருவில் சத்தியத்தை சொல்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கிறது.முபீன்
    பைசல் மதனியை மிம்பரில் ஏற்றியதற்காக, தரிக்கா,செய்குமார்களை விட்டு விலத்தி விட்டார் என்று அர்த்தமில்லை.
    மிஹ்ளார்,சலாம் ராசிக் மகன் இன்னும் எனக்கு பெயர் தெரியாத ஒரு சிலரின் கைங்கரியம் இருக்கிறது.தற்சமயம்
    பைசல் மதனியை தனி மனிதனாக்க பிரித்தாளும் சூழ்ச்சியில் கொழும்பை சேர்ந்த ஒரு சிலர் வெற்றி அடைந்தும் இருக்கிறார்கள். அவருடன் இருந்தவர்களை, சத்தியதிட்கு விரோதமானவர்கள் பிரிக்கும் போது அதற்குள் சுபியானும்
    சிக்கி விட்டார்.பைசல் மதனியை பாதுகாத்து நிச்சயமாக சத்தியம் நிறைந்த புதிய சோனக தெருவை
    உருவாக்க அல்லாஹ் உதவி செய்வான்.சத்தியத்தை விரும்பும் ஒவ்வொருவரும் அவரைப் பலப்படுத்துவோம்.
    அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.தொலைபேசி.0718363906

    ReplyDelete

Powered by Blogger.