Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்கு முன்நிற்கும் 2 முக்கிய தெரிவுகள் - விளக்குகிறார் ரவூப் ஹக்கீம் (படங்கள்)

அபு ஆதில்

எதிர்வரும் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற விடயத்தை நாங்கள் அர்த்த புரிஸ்டியோடு அரவனைக்கலாமா? சுஹிக்கலாமா? என்ற கேள்வி இருப்பதாக 2012.09.05ம் திகதி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவருமான  ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் அல்ஹாஜ் கலீல்(குயின்ஸ்) தலைமையில் இடம்பெற்ற இம்மாபெரும் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய  ரவூப் ஹக்கீம்,
 
முஸ்லீம் காங்கிரஸ் தான் கிழக்கு மாகாண சபையைத் தீர்மானிக்கின்ற சக்தியாக வர இருக்கின்றது என்ற விடையத்தில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது என்று தெரிவித்த ஹக்கீம் ஆசனங்களின் தொகை ஒன்றிரண்டு கூடலாம் குறையலாம் ஆனால் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லீம் காங்கிரஸ் தான் வரும் என உறுதிபட கூறினார்.

கடந்த மாகாண சபை ஒரு பொம்மை முதலமைச்சரை வைத்துக்கொண்டு பொம்மை ஆட்சி நடாத்தியதாகவும் இப்படியான ஒரு சபை அமைய தான் ஒரு போதும் இடமளிக்கப்போவதும் இல்லை என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் இடம்பெற்றது போன்று வாக்கு மோசடிகள் இந்தத்தேர்தலிலும் இடம்பெறலாம் என மக்கள் மத்தியில் சந்தேகம் இருப்பதாகக்குறிப்பிட்ட அவர் தற்போதுள்ள தேர்தல் ஆணையாளர் சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடியவர் என்றும் பொலீஸ்மா அதிபர் கூட நல்ல முன்னேடுப்புக்களைச் செய்து வருவதாகவும் தாங்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பாக இருந்த SSP யை நான்கு பொலீஸ் நிலையங்களின் நடவடிக்கைகளில் தலையிடாது இருக்கும் அளவுக்கு முடக்கப்பட்டு அவருக்குப்பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

கடந்த கால பொம்மை ஆட்சிக்கு உதாரணமாக, அரசாங்கம் கிழக்கு மாகாண சபையை கலைப்பதற்கான முஸ்தீபுகளை செய்து கொண்டிருந்த வேளையில் தான் அப்போதைய முதலமைச்சராக இருந்த பிள்ளையானிடம் உரையாடிய போது தான் மாகாண சபையை கலைப்பதற்கு எதிராக சட்ட மூலம் ஒன்ரைக்கொண்டு வருவதாகக் கூறி பின்னர் அந்த சட்ட மூலத்தை அவர்கள் நிறைவேற்றியதாகவும் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று கை கட்டி வாய் மூடி வெள்ளைப்பேப்பரில் கையொப்பமிட்டு விட்டு வந்ததாகவும் இது போன்ற பொம்மை ஆட்சிக்கு தாங்கள் துணைபோகப் போவதுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லீம் காங்கிரசை வெளியே விட்டு விட்டு அரசாங்கம் தற்போது ஆப்பிழுத்த குரங்காக அவதிப்படுவதாகக் குறிப்பிட்டார்.

நமது ஜனாதிபதி ஏட்டிக்கு போட்டியாக உள்ள பல வல்லரசுகளுடன் அவர்களை நண்பராக்கிக்கொண்டு செல்கின்ற அவருடன், சீனாவும் நண்பன் இந்தியாவும் நண்பன்,  இந்தியாவும் நண்பன் பாகிஸ்தானும் நண்பன், ரஷ்யாவும் நண்பன் அமெரிக்காவும் நண்பன், இஸ்ரேலும் நண்பன் பாலஸ்தீனமும் கூட்டாளி இப்படியான இராஜதந்திரத்தை தான் கண்டதே கிடையாது எனக்குறிப்பிட்ட அவர் சர்வதேச அளவில்  இராஜதந்திரத்தை பயன்படுத்தும் ஜனாதிபதி கிழக்கு அரசியலில் தனது இராஜதந்திரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். முஸ்லீம் காங்கிரசுக்கும் தேசிய காங்கிரசுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளதாக கூறிய ஹக்கீம் இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவும் இந்தத் தேர்தலின் போது நல்ல பாடத்தை படிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

தங்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஹக்கீம் ஒன்று மத்திய அரசில் அமைச்சை வைத்துக்கொண்டு முதலமைச்சை கைப்பற்றிவது அடுத்தது மத்திய அரசில் அமைச்சுப்பதவியை விட்டு விட்டு முதலமைச்சை கைப்பற்றிவது என்ற பெரிய சவாலோடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 






 
 
 

1 comment:

  1. மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற டக்லஸ் தேவானந்தாவின் கோஷத்தின் அர்த்தம் இப்போதுதான் ஹக்கீமுக்கு புரிந்துள்ளது. எல்லாத்திலும் லேட். இதிலுமா?

    ReplyDelete

Powered by Blogger.