யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை துரத்தியது போல கிழக்கிலும் முயற்சித்தனர் - மஹிந்த
TN
ஹம்பாந்தோட்டை மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகள், சலுகைகளை கிழக்கு மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வாக்குகளுக்காக மக்கள் மத்தியிலுள்ள அந்நியோன்யத்தை சிதைக்கக் கூடாது எனவும் அரசியல் வாதிகளை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். கிழக்கு மக்களுக்கான பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தொடர்ந்தும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகள், சலுகைகளை கிழக்கு மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வாக்குகளுக்காக மக்கள் மத்தியிலுள்ள அந்நியோன்யத்தை சிதைக்கக் கூடாது எனவும் அரசியல் வாதிகளை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். கிழக்கு மக்களுக்கான பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தொடர்ந்தும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
கிண்ணியாவிற்கு நான் மூன்றாவது தடவையாக விஜயம் செய்துள்ளேன். நான் இங்கு பாலம் திறக்க வருகை தந்த போது சிலர் அதனை விரும்பவில்லை. சிலர் இந்தப் பாலம் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் எனக் கூறினர். 30 வருட கால யுத்தம் முடிவடைந்து நாடு தற்போது அபிவிருத்தி கண்டு வருகிறது. 1970களில் உங்கள் நஜீப் ஏ. மஜீத்தின் தந்தையார் எம்முடன் பாராளுமன்றத்தில் இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியினர் அவரது அறைக்கு குண்டு வீசி அவரை அச்சுறுத்தினர்.
பயங்கரவாதிகளால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியது போலவே இங்கிருந்தும் முஸ்லிம்களை துரத்த முயற்சித்தனர். நாம் மக்களை மீளக் குடியேற்றி பள்ளிவாசல்களையும் மீள நிர்மாணித்துக்கொடுத்துள்ளோம். இன்று அமைதிச் சூழல் நிலவும் நிலையில் சிலர் இனவாதம், மதவாதம் பேசி மக்களைப் பிரிக்கப்பார்க்கின்றனர். அரசியல் இலாபத்திற்காக மக்கள் மத்தியில் உள்ள அந்நியோன்யத்தை சிதைக்க வேண்டாமென நான் சகல அரசியல் வாதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் பாராளுமன்றத்தில் 3 இல் இரண்டு வீத பெரும் பான்மைப் பலத்தைக் கொண்டுள்ளோம். சகல மாகாண சபைகளின் அதிகாரங்களும் பெருமளவிலான உள்ளூராட்சிச் சபைகளின் அதிகாரங்களும் எம்மிடமே உள்ளன. அதன் மூலம் நாம் மக்களுக்கு அளப்பரிய சேவைசெய்து வருகிறோம். இம்முறை தேர்தலில் சேவை செய்யக்கூடிய சிறந்த பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுங்கள். அது சேவைகளை மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வாய்ப்பாக அமையும்.
கிழக்கின் வசந்தம் மூலம் நாம் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறோம். நாட்டின் மிக நீளமான பாலம் கிண்ணியாவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்கள் பலமுறை அத்திவாரம் போட்ட பாலம் இது. நாமே அந்தப் பாலத்தை கட்டிமுடிந்தோம். அத்துடன் உப்பாறு, காயாங்கேணி உள்ளிட்ட பல பாலங்கள் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு போக்குவரத்துக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இனி இந்தப் பிரதேசம் கஷ்டப் பிரதேசமாக இருக்க முடியாது. இன, மத, குல, பிரதேச மாகாண ரீதியிலான குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு இனி இடமில்லை. அம்பாந்தோட்டை மக்களும் கிண்ணியா மக்களும் சரி சமமாக சகல உரிமைகளுடனும் வாழவேண்டும். அதற்காகவே நாம் பல செயற்திட்டங்களை நடைமுறைப்ப டுத்தி வருகிறோம். இன வாதத்தைத் தூண்டி நாட்டு மக்களை தவறாக வழி நடத்த பலரும் முயற்சிக்கின்றனர். எதிர்காலம் பற்றி சிந்தித்து நிதானமாக தீர்மானம் எடுக்க வேண்டும்.
வெற்றிலையின் சின்னம் வெற்றியின் சின்னம் என்பதால் வெற்றிலைக்கு வாக்களித்து நம்பிக்கையுடன் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்வோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

தலைவா!உன் பேச்சை கேட்கும் போதெல்லாம் புல்லரிக்கிறது.ஆனால் செயலில் உங்கள் இன,மதவாதிகள் எங்களை
ReplyDeleteகொல்லாமல் கொல்கிறார்களே.இலங்கையில் என நடக்கிறது என்றாவது உங்களுக்கு தெரியுமா?எங்கள் துஆவும்,
ராணுவத்தின் வீரமும்தான்நம் நாட்டை காப்பாற்றியது.மக்கா சென்று எங்களுக்காக கேட்டதை விட நம் நாட்டு
பயங்கரவாதிகளுக்கு எதிராக கேட்டதுதான் அதிகம்.
ஆளும்,எதிர்கட்சிக்கும் நீங்கள் தானே ஜனாதிபதி அப்போ நீங்கள் தானே முழு இலங்கை மக்களையும் பாதுகாக்க
வேண்டும்.பேசிக் கொண்டிருக்காமல் இனவாதம் கக்கும் யாராக இருந்தாலும் உடன் நடவடிக்கை எடுத்து
உண்மையான மூத்த குடிமகன் என்பதையும் , ஸ்ரீ லங்கா யாருக்கும் அடிமை நாடல்ல,நமக்கு புத்தி சொல்ல தகுதி யாருக்கும் இல்லை என்பதையும் உலகுக்கு காட்டுங்கள்