அமைச்சர் றிசாத் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் - ஆதரவாக மூத்த சட்டத்தரணிகள்
அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நிதிமன்றத்தில் ஆஜராகவுள்ள அதேவேளை அவருக்கு ஆதரவாக மூத்த சட்டவாளர்கள் நீதிமன்றத்தில் வழக்காடவுள்ளனர்.
மன்னார் நீதிமன்ற நீதபதி அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
அமைச்சர் றிசாத்திற்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டரத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் உள்ளிட்டவர்களுடன் மேலும் 3 ஜனாதிபதி சட்டத்தரணிகளும் மற்றும் சில மூத்த சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment