Header Ads



கிழக்கு தேர்தல் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அறிக்கை

 
இர்ஷாத் றஹ்மத்துல்லா

சந்தர்ப்பம் என்பது எப்போதும் கிடைப்பதில்லை.அது கிடைக்கும் போது பயன்படுத்த தெரியாமல்,பின்னர் கைசேதப்படுவதில் பிரயோசனமில்லையென்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய  தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் நாளை மறுதினம் இடம் பெறும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று கிழக்கு மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

நடைபெறவுள்ள தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பதற்கு மக்கள் ஆயத்தமாகிவருகின்றனர். கிழக்கில் தொடர்ந்தும் அச்சமற்ற சூழலில் மக்கள் வாழ்வதற்கான மற்றுமொரு சந்தரப்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் ஒரு இதனை நோக்குமாறு கிழக்கு வாழ் வாக்காளர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரிவினைவாதிகளை இத்தேர்தலின் மூலம் ஒரம்கட்ட அனைவரும் ஒன்றுபடுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

புறையோடிப் போயிருந்த யுத்தம் தந்த அழியாவடுக்கல் இன்னும் எமது கண்முன் காட்சித் தருவதை நினைவுபடுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,மீண்டும் அவ்வாறு ஒரு நிலையினை ஏற்படுத்த முனையும் கட்சிகளுக்கு இந்த தேர்தல் தகுந்த பாடத்தை புகட்ட சகலரும் ஒன்றுபடுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்துள்ளார்.

இதே வேளை கிழக்கு மாகாண தெர்தல்முடிவானது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை பரைசாட்டி நிற்பதில் எவ்வித சந்தேகமுமில்லையென நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன்,ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பில் மாவட்டத்தில போட்டியிடும்,முன்னால் அமைச்சர் அமைச்சர் எமது கட்சியின் முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர்,பொறியியலாளர் சிப்லி பாருக்,திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் கிண்ணியா நகர முதல்வர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப்,தொழிலதிபர் அப்துல் ரஸ்ஸாக்(நளீமி),அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முன்னால் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன் ஆகியோரது வெற்றியிலும் கிழக்கு வாக்காளர்கள் பங்காளிகளாக இருப்பது எமது கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.