அம்பாறையில் 'கபே' யின் தேர்தல் பணிகள்
நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அமைப்பு இன்று நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் காண்காணிப்பு பணியினை மேற்கொள்ளும் கண்காணிப்பாளர்களுக்கான அடயாள அட்டை மற்றும் கடிதங்கள் என்பன வழங்கி வைத்துள்ளன.
திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தேர்தல்கள் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அம்பாறை மாவட்ட பொத்துவில், திருக்கோவில், ஆளையடிவேம்பு, அக்கரைப்பற்று, இறக்காமம், அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து மும்மதத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 70 பேரைக் கொண்ட குழுவை கபே அமைப்பு தெரிவு செய்து அவர்களுக்கு தேர்தல்கள் தொடர்பான பயிற்சிகளையும் வழங்கியுள்ளது.
இத்தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள், தவறுகள், தண்டனைகள் பற்றிய ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை கபே அமைப்பின் சட்டத்தரணிகளான சுரேன்திர வணகல மற்றும் நிரோஷன் பண்டார ஆகியோரினாலும் கண்காணிப்பு தொடர்பான பயிற்சியை கபே அமைப்பின் கிழக்கு மாகாண பிரதம இணைப்பாளர் மனாஸ் மக்கீன் மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஜே.எம்.றியாஸ் ஆகியோரினாலும் கடந்த வாரம் அம்பாறை ஆர்யா வவன் ஹோட்டலில் நடாத்தி வைக்கப்பட்டன.
எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை தேர்தல்கள் நடமாடும் பணியினை மேற்கொள்ளும் கபே அமைப்பின் அம்பாறை மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு கண்காணிப்பு நடமாடும் பணியில் ஈடுபடுபவர்களின் ஆள் அடையாளத்தை உறுதிசெய்யும் கபே அமைப்பின் அடயாள அட்டை மற்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் மூலம் தேர்தல்கள் ஆணையாளரினால் நடமாடும் கண்காணிப்பு பணியினை மேற்கொள்வதற்காக வேண்டி உறுதி செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்ட கடிதங்கள் என்பன அட்டாளைச்சேனை கபே அமைப்பின் அம்பாறை மாவட்ட காரியாலையத்தில் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஜே.எம்.றியாஸினால் நேற்று வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக கபே அமைப்பின் மூலம் தேர்தல்கள் கணிகாணிப்பு பணியில் ஈடுபடும் அனைத்து கண்காணிப்பாளர்களும் தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சிக்கோ அல்லது எந்த வேட்பாளர்களுக்கோ பக்க சார்பாக நடந்துகொள்ளக் கூடாது என இந்நிகழ்வின் போது ஏ.ஜே.எம்.றியாஸினால் எத்தி வைக்கப்பட்ட விடயம் இங்கு குறிப்பிடத்தக்க வேண்டியதொன்றாகும்.

Post a Comment