Header Ads



பொத்துவில் முஸ்லிம்களுக்கு நெருக்கடி - சீன மீனவர்களுக்கு அனுமதி

 
பொத்துவில் கடலில் மீன்பிடியில் ஈடுபட சீன நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பொத்துவில் கடற்பரப்பில் இரண்டு சீன கப்பல்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி  மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன என்று பொத்துவில் பிரதேச மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சீன நிறுவனம் ஒன்று இந்த கடலில் பொடம் ட்ரோலின் முறையின் மூலம் வலை விரித்து மீன் பிடித்து வருகின்றது. இதனால் இலங்கை கடல் வளம் சட்டவிரோதமான முறையில் சுரண்டப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்தி, தமது தொழிலுக்கு உத்தரவாதமளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கேட்டுள்ளனர். UN

 

3 comments:

  1. கடலில் மீன்பிடி மட்டுமல்ல, தரையில் விவசாயத்துக்கும் இராணுவத்தைக் கொண்டு பொத்துவிலில் தடைகள் இடப்படுகின்றன. இந்த இலட்ஷணத்தில் அரசுக்கு வாக்களிக்க அதாஉல்லா போன்றவர்கள் வக்காலத்து வாங்குகின்றார்கள். அவர்களுக்கு வருமானத்துக்குத்தான் கொமிஸன் இருக்கின்றதே! கடலும், தரையும் பற்றிய கவலை அவர்களுக்கு எதற்கு!

    ReplyDelete
  2. இதிலை புதுசா ஒண்டுமில்லை..... சிறிலங்கா ரெண்டு பேருக்குத்தான் சொந்தம்...
    இந்த நாட்டின்ர வளங்கள் சைனாவுக்கும், அத வித்து வார காசு பிரசிடன்ட பமிலிக்கும் சொந்தம்.

    ReplyDelete
  3. pothuwilil 1/2 acre kaanniku meala kaaani irunda ada arasangam parimudal seidam nu oru kada,,,? Unmaya....????

    ReplyDelete

Powered by Blogger.