முஸ்லீம் காங்கிரஸிற்கு லீடர் இல்லை, டீலர்தான் உள்ளார் - கே.ஏ.பாயிஸ் (படங்கள்)
அனா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இன்று நோர்வைக்கும் அமெரிக்காவுக்கும் றவூப் ஹக்கீம் விற்றுவிட்டார். அது இன்று சமூகத்தின் கட்சியல்ல நோர்வேயினதும் அமெரிக்காவினதும் கருத்துக்களை ஏற்று நடக்கும் கட்சியே என்று புத்தளம் நகர சபைத் தலைவர் கே.பாயிஸ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து வாழைச்சேனை பிரதேசத்தில் ரீ.சாயிப் தலைமையில் நேற்று இரவு (04.09.2012) இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் எதையும் தரமாட்டோம் சமூகத்தின் உரிமைகளை மாத்திரமே முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுத் தரும் என்ற கொள்கையுடன்தான் கட்சியை வளர்த்தெடுத்தார். ஆனால் இன்றயத் தலைமை கட்சியைப் பொறுப்பெடுத்ததன் பின்னர் சமூகத்திற்கு தேர்தல் காலத்தில் அரிசி, பணம் போன்றவைகள் தருவோம் உரிமைகள் மாத்திரம் பெற்றுத் தர மாட்டோம் என்று செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்.
இன்று முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் லீடர் இல்லை டீலர்தான் உள்ளார் கட்சியின் லீடர் என்ற பதவி மறைந்த தலைவரோடு தெலைந்து விட்டது. இன்றயத் தலைவர் பல நாடுகளுக்கு டீலராகத்தான் இருக்கிறார் அவர் லீடராக இருப்பதைவிட டீலராக இருப்பதையே விரும்புகிறார்.
அன்று முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் காலத்தில் ஆதரவாளர்களே செலவளித்தார்கள் இன்று நிலமை மாறி தேர்தல் காலம் வந்தால் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை வந்து பணம் கொடுத்து வாக்குக் கேடகும் அளவுக்கு கட்சியின் நிலை மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.




Post a Comment