அமைச்சர் றிசாத் மீதான குற்றசாட்டு அடிப்படையற்றது - நீதிமன்றில் பாயிஸ் முஸ்தபா வாதம்
நீதிமன்ற கட்டிட தொகுதியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
நீதி மன்றத்தின் செயற்பாடுகளை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதி மன்றினால் அழைப்பானை பிறப்பிக்கப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புதன்கிழமை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தமது சட்டதரணிகள் சகிதம் ஆஜரானார்.
மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இலக்கம் 303 ஆம் நீதிமன்றில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜயசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை இடம் பெற்றது.
பிரதிவாதியான குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர் றிசாத் பதீயுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் ஆஜராகினர்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என்பதாகவும்,அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு போதுமான சட்ட நடவடிக்கைகளுக்கான ஆதாரங்கள் இன்மை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார்.
இவற்றை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைகளை எதிர்வரும் 2013 பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி 301 ஆம் இலக்க நீதிமன்றின் அறையில் எடுப்பதென நீதிபதிகள் அறிவித்தனர்.






Post a Comment