Header Ads



மடவளையில் அல்-முனவ்வரா ஆரம்பப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு (படங்கள்)

ஹபீஸ்

ஐயாயிரம் ஆரம்பப்பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மடவளையில் இன்று அல்-முனவ்வரா ஆரம்பப் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

(3.9.2012) அரசின் ஆயிரம் இடை நிலைப்பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மடவனை மதீனா தேசிய பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளதன் காரணமாக மதீனாவின் ஆரம்பப் பிரிவு இன்று முதல் மகாண சபையின் கீழ் ஆரம்பப் பாடசாலையாக மாற்றப்பட்டள்ளது. ஆதனடிப்படையில் இன்று முதல் அல்-முனவ்வரா கனிஷ்ட பாடசாலையாக மதற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வைபவத்தில் வத்துகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் டப்னியூ.எம். விஜேரத்த, மாகாண முஸ்லிம் பல்விப்பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் என்.எம்.எம். நஸார் உற்படப்பலர் கலந்து கொண்டனர்.

ஆங்கு துலாப்பிராத்தனை நடத்திய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உபதரைவர் மௌவி எம்.எச்.எம். புர்ஹான் (பஹ்ஜி) தெரிவித்ததாவது-
சிறுபிள்ளைப் பருவம் என்பது மிக முக்கிய பருவாமாகும். இவ்வயதில் பதியும் நிகழ்வுகள் அவர்களது நெஞ்சை விட்டு அகலாது.

எனவே ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் பணி மிகக் கடுமையானது. எனவே அவர்கள் அவதானமாகக் கடமையாற்ற வேண்டும். சமூகத்திற்கு சல்லவரை உருவாக்குவதும் இவர்கள்தான். அவர்களைத் தீயவர்களாக மாற்றுவதும் இவர்கள்தான்.

ஆரம்பப் பிரிவில் உருவாக்கப்படும் மாணர்களே உயர்பிரிவிற்கு வந்ததும் முரண்பாடு கொண்டவர்களாக மாற்றப்படுகின்றனர். எனவே ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றார்.
 




 
 

No comments

Powered by Blogger.