Header Ads



இந்தக் குழந்தைக்காக பிரார்த்தனை செய்வோம்..!


 
என் அன்பிற்கினிய  சகோதர சகோதரிகளுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்..!
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,

இது என்னுடைய மகன் ஷபீக் அஹ்மத். 11 மாத குழந்தை. 18 வருடத்திற்கு பின்னர் இறைவன் கனிந்து அருளிய மழலை, அல்ஹம்துலில்லாஹ்..!
 
குறை மாதத்தில் ஏராளமான பிரச்சனைகளுடன் பிறப்பெடுத்தான். பிறந்தவுடன் சுவாசக்கோளாறு இருந்ததினால் 5 நாட்கள் VENTILATOR இல் வைத்திருந்தோம்.

UNDER WEIGHT BABY,முளை யில் BLOOD CLOT, HEART PROBLEM, BLOOD PLATLETS குறைவு முதலிய பல்வேறு பிரச்சனைகளை தாங்கி ஆஸ்பத்திரி ICU வில் ஏகதேசம் ஒரு மாதம் இருந்து விட்டு வந்தோம்.

பின்னர் இதுவரையிலும் பல்வேறு பிரச்சனைகளை எல்லாம் இறைவன் அருளால் சமாளித்து இப்போது 11 மாதங்கள் ஆகிறது . மூளையில் BLOOD CLOT இருந்ததினால் BRAIN DEVELOPMENT போதிய அளவுக்கு ஆகவில்லை.

இந்த பருவத்தில் சாதாரண குழந்தைகளிடம் காணப்படும் எந்தவித DEVELOPMENTS ம் இந்த குழந்தையிடம் இல்லை. இது வரையிலும் நம் முகம் பார்த்து சிரிக்க கூட இல்லை.

 அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.. !

மருத்துவம் தொடர்கிறது . எல்லா மருத்துவத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்து அனுதினமும் நாங்கள் காத்திருக்கிறோம்!

இன்ஷா அல்லாஹ் இறைவன் கனிந்து அருள் புரிவான் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

பழைய Medical Reports களை சமீபத்தில் ஒரு மருத்துவர் பார்த்துவிட்டு, இன்னும் இந்த குழந்தை    உயிர் வாழ்கிறதா? என்று மிக ஆச்சரியமாக கேட்டார் . '' ஆயுளுக்கு அதிபதி படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமன்றோ.. !

என்னுடைய இந்த குழந்தை இறைவனுக்கும், எனக்கும், இந்த சமுதாயத்துக்கும் பயன் படத்தக்க வகையில் ஒரு சாலிஹான நல்லடியானாக இறைவன் ஆக்கி அருளவும், இந்த மழலையின் நோய்கள் அனைத்தையும் நீக்கி பரிபூரண ஷிபா ஆக்கி தரவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய மிக அன்புடன் வேண்டுகிறேன்!

Sulthan Hameed Omar
Thiruvithancode,
India

10 comments:

  1. Thavakkalthu alallah.Insha allah,he will make it easy.Remember,the parents dua for their children will be accepted.

    ReplyDelete
  2. அல்லாஹ் பேரருளாளன் ... அவனே போதுமானவன் உங்கள் குழந்தையை பூரண குணமாக்குவான்... நம்பிக்கை வைப்போம் இன்ஷா அல்லாஹ் ...

    ReplyDelete
  3. Ameen Insah Allah Allah will help you

    ReplyDelete
  4. My dear Brother,
    Assalamu Alaikum wa rahmathullah.

    Don't be afraid, Allah will definitely help you.
    I pray Allah to Save this innocent child's life.

    ReplyDelete
  5. உள்ளம் களுக்கு ஆனா சொந்த காரனான அல்லாஹ்வே இவரது கவலைகளை நீக்கி விடுவாயாக. அந்தக் குழந்தைக்கு பூரண சுகத்தை அளிப்பாயக

    ReplyDelete
  6. உங்கள் குழந்தைக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்வற்றை கொடுப்பானாக..

    யாஅல்லாஹ் இந்தக் குழந்தையின் உடல் சுகயீனத்தை குணப்படுத்துவாயாக..

    ஸாலிஹான மக்களோடு சேர்த்து வைப்பாயாக...

    ReplyDelete
  7. WHOEVER KEEP THEIR FAITH IN ALLAH SPECIALLY IN DIFFICULT TIMES DEFINITELY THEY WILL SEE ALLAH'S MERCY SOON .. INSHA ALLAH ..

    ReplyDelete
  8. இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் உங்கள் குழந்தை பூரண ஆரோக்கியம் பெற்று நீண்ட காலம் வாழ நம்மைப் படைத்த
    இறைவனிடம் நாம் பிராத்திக்கின்றோம்

    ReplyDelete
  9. Insha allah, we do.

    Thawakalthu alallaah.

    ReplyDelete
  10. iensha allha niccayamaha allha konappaduttuvan aameen

    ReplyDelete

Powered by Blogger.