மன்னார் முஸ்லிம் குடியிருப்புகளுக்கு தீவைப்பு - விசாரணைக்கு வலியுறுத்து
முஸ்ஸிம் மக்களின் வீடுகள் தீ வைத்த சம்பவம் மற்றும் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கென இடங்கள் எவையும் இல்லையென்பது தெளிவாகத் தெரிகிறது.மன்னார் மறிச்சிக்கட்டி மரைக்கார் நகர் கிராமத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம் மக்களின் குடிசைகளுக்குத் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வந்த தமிழ், முஸ்ஸிம் மக்கள் இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களிலும், அயல் கிராமங்களிலும் தற்காலிகமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மரைக்கார் நகர் கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்ஸிம் மக்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் மக்கள் மீளக்குடியமர ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் மறிச்சிக்கட்டி மரைக்கார் நகர்க் கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்ஸிம் மக்கள் மீண்டும் தமது கிராமத்தில் மீளக் குடிய மர்ந்தனர். இதன் போது இந்த மக்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் குறித்த தற்காலிக வீடுகளை உடைத்துச் சேதப்படுத்தியதோடு ஏனைய வீடுகளுக்குத் தீ வைத்து கொளுத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 21 குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை இழந்த நிலையில் உள்ளன. குறித்த சம்பவத்தில் கடற்படையினரே ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற போரால் இடம்பெயர்ந்து சென்று மீண்டும் தமது சொந்த மண்ணில் குடியமர்வதற்குப் பல்வேறு சிரமங்களையும் எதிர் கொண்ட இந்த முஸ்ஸிம் மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த போதும் குறித்த சம்பவம் அவர்களுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அரச தரப்புடன் இருக்கின்ற எவராக இருந்தாலும் சரி அவர்கள் அரசை விட்டு வெளியில் வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து ஒருமித்துச் செயற்படத் தயாராக உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அரசு துரித விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு குறித்த சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது என்றுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் அரசு துரித விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு குறித்த சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது என்றுள்ளது
மதிப்புக்குரிய உருப்பினனர் ஐயா!!!
ReplyDeleteஇனிமேலும் இப்படியான செயல்களுக்கு இன மொழி
பாராமல் குரல் கொடுங்கள் மாவட்ட சக பா, உறுப்பினர்களுடனும்
இணைந்து போராடுங்கள்........
இஞ்சார்ரா முசுப்பாத்திய...
ReplyDeleteஆயர்ர நன்றியுள்ள பிராணி வாயத் திறக்குது...
மான் நனையுதெண்டு புலி அழுத கதை தெரியாட்டில், இப்ப தெரிஞ்சு கொள்ளுங்கோவன்.
((ஆயர் நன்றியுள்ள பிராணி = டைகர்)