முஅம்மர் கடாபியின் 'கறுப்பு பெட்டி' நாடு கடத்தப்பட்டார்
TN
லிபிய முன்னாள் தலைவர் அப்துல்லா அல் சனூசியை மொரித்தானிய அரசு லிபிய நிர்வாகத்திடம் கையளித்துள்ளது.
லிபியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்த சனூசியை பல குற்றச்சாட்டுகளின் கீழ் லிபிய நிர்வாகம் கோரியது. அதேபோன்று பிரான்ஸ் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரின.
கடந்த ஆண்டு முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து சனூசி மெரித்தானியாவுக்கு தப்பிச் சென்றார். எனினும் சனூசி உள்நாட்டுக்குள் நுழையும்போதே மொரித்தானிய அரசு அவரை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து சனூசியை கையளிக்குமாறு மொரித் தானிய அரசை லிபியா பல முறை கோரியிருந்தது.
குறிப்பாக அப்போது பெங்காசியை மையமாகக் கொண்டு இயங்கிய அரசியல் பிரிவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டும் சனுசி மீது சுமத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெப்ரவரியில் முஅம்மர் கடாபி அரசுக்கு எதிராக லிபியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி பெங்காசி நகரை மையமாகக் கொண்டே செயற் பட்டது.
அதேபோல் பிரான்ஸ் நீதிமன்றமும் சனூசிக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த 1989 ஆம்ஆண்டு பிரான்ஸ் விமானத்தின் மீது குண்டுவைத்த குற்றச்சாட்டில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சர்வதேச பொலிஸான இண்டர்போலும் இவரைப் பிடிக்க சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. மக்கள் சொத்தைக் கொள்ளை அடித்தது மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காகவே இண்டர்போல் தேடி வந்தது.
சனூசி லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் ‘கறுப்பு பெட்டி’ என வர்ணிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

pothum pothum........
ReplyDelete