Header Ads



திருகோணமலையில் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி - மேஜர் ஜெனரல் சில்வா

 
திருகோணமலையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில்  திருமலை மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக திருமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மேஜர் ஜெனரல் டி.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.இன்று காலை முதல் வாக்களி்ப்பு நிலையங்களுக்கான அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
திருமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 3 தேர்தல் தொகுதிகளில் 280 க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நாளை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு மாலை 4.00 மணி வரை இடம்பெறும். அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் பொலீஸாரின் ரோந்து சேவைகளும் தற்போது இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.