முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வரமுடியாது - பைசல் காசிம் புது விளக்கம்
மு.கா.வைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க எமது கட்சி விரும்பவில்லை என்பது தவறானது கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமது கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு தாம் கோரிக்கை விடுத்தபோதும் சட்டப் பிரச்சினை அதற்கு தடையாக இருந்ததாக திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.மாகாண சபை சட்டப்படி ஆகக்கூடிய ஆசனங்களை வென்றெடுத்த கட்சியிற்கே ஆட்சியை அமைக்க ஆளுநரிற்கு அழைக்க முடியும். இதன்படி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு முதலமைச்சராக வரமுடியாது இதனாலே முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அதே போன்று முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்பவில்லை எனக் கூறப்படுகின்றதே அதில் உண்மையிருக்கின்றதா என நவமணி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தே பைசல் காஸிம் இதனைத் தெரிவித்தார்.
அது பெரும் வதந்தி. நாம். முதலமைச்சர் பதவியைக் கேட்டோம் சட்டப் பிரச்சினை இதற்கு தடையாக இருந்தது. அடுத்த இரண்டரை வருடங்களின் பின் சட்டத்தை திருத்தி முதலமைச்சர் பதவியை வழங்க எமக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாகாண சபை சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. மாகாண சபை ஆட்சியமைப்பது தொடர்பாக கட்சியின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் திருத்தம் கொண்டுவருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். Navamani
ரூம் போட்டு யேசிச்சி இருப்பாரொ...... இப்படி எல்லாம் விலக்கம் சொல்ல..
ReplyDeleteஅப்படியானால் ஏன் இதை தேர்தலுக்கு முன் மக்களுக்கு தெரிவிக்கவில்லை...?
ReplyDelete