அழகான இலங்கை (படங்கள் இணைப்பு)
(யாழ் முஸ்லிம் இணையத்தின் கண்டிப் பிராந்திய நிருபர் ஜே.எம்.ஹபீஸின் கமராவில் சிக்கிய அழகிய படங்களே இவை)
சுற்றுலாத்றையினரின் வருகை குறைந்தபோதும் பேராதனைத் தாவரவியற் பூங்காவிற்கு சுற்றுலாத்துறையினரின் வருகையில் எதுவித வீழ்ச்சியும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ள பேராதெனியப் பூங்காவில் ஓர்கிட் இல்லம் உற்பட இன்னும் பலவற்றைப் பார்வையிடுவதற்காக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ள பேராதெனியப் பூங்காவில் ஓர்கிட் இல்லம் உற்பட இன்னும் பலவற்றைப் பார்வையிடுவதற்காக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர்.
147 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பேராதனைப் பூங்காவில் 300 இற்கும் மேற்பட்ட ஓர்கிட் வகைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனையப் பூங்காவை பார்வையிடுதற்காக வருடம் தோறும் குறைந்தபட்சம் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக பேராதெனியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேராதனையப் பூங்காவை பார்வையிடுதற்காக வருடம் தோறும் குறைந்தபட்சம் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக பேராதெனியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
விக்கிரமபாகு மன்னனின் காலமான 371ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா 1821ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சட்டபூர்வ அரசாங்க நிர்வாகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை சுற்றுலாத்துறையினா் வருகை தருகின்றனர்.
உள்ளூர் மக்களுக்கு 50 ரூபா பிரவேசக்கட்டணம் அறவிடப்படுகின்றது. அதேநேரம் வெளிநாட்டினருக்கு 800 ரூபா வரை பிரவேசக்கட்டணம் அறவிடப்படுகிறது. மகாவலி கங்கையின் ஒரு வளைவு இதன் எல்லையாக சூழ்ந்து காணப்படுகிறது.
படங்கள் மிக அழகாக உள்ளது இதை High Resolution ஆக வெளி இட்டால் கணியில் வால்ல்பபேர் ஆக பாவிக்க முடியும்.
ReplyDeleteஇதையும் புனித பூமி என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.உள்,வெளி நாட்டவருக்கு என்று விலை வித்தியாசம்
ReplyDeleteஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை.மிருக காட்சி சாலை,மியூசியம்,போன்ற இடங்களிலும் விலைகளில் பாரிய
வித்தியாசம்.உதாரணமாக கொழும்பு குமார வீதியில்(prince street )இருக்கும் மியூசிய நுழைவுக் கட்டணம் Rs20
வெளி நாட்டவருக்கு Rs500 (பெரியவர்கள்) சிறுவர்களுக்கு Rs300 நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பெற்றோர்களும் மூன்று சிறுவர்களும் வந்து டிக்கட் வாங்கினார்கள்.மொத்தம் Rs1900 வந்தவர்கள் Rs2000 கொடுத்தார்கள்.மீதி Rs100 உம்,நுழைவு டிக்கட்டும் கொடுக்காமல் உள்ளே அனுமதித்தார்.மேசையில் இருந்தவர் நான்
முழுவதையும் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு பதறி விட்டார்.நம் நாட்டு சித்து விளையாட்டுகளை பார்த்து மனம் நொந்தவனாக, போத்துக்கல்காரனுடைய நாலு உடைந்த மேசை,கதிரைகளையும் கலர் மங்கி போன ஒருசில படங்களையும் பார்த்து வந்தேன்.இவைகளை பாதுகாக்க பல பேர்கள்.வெளி நாட்டவர்களுக்கு நட்டம் ,நமக்கு இலாபம்,டிக்கட் கொடுத்தவருக்கு அதைவிட இலாபம்.வாழ்க நாட்டுப்பற்று . மியுசியத்திலிருக்கும் பொருட்களை வேறு மியுசியங்கலுக்கு மாற்றி விட்டு அந்த இடத்தில் Super complex ஒன்றைக் கட்டினால் கோத்தாவுக்கு பல ஆயிரம் கோடி தேறும்