'ஒஸாமா பின் லேடன்' சர்ச்சை தொடருகிறது..!
உயர் அதிகாரிகள் தன்னை சரியாக நடத்தவில்லை என்ற விரக்தியில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த நூலை எழுதியதாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் மாட் பிஸ்ஸனெட் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, ரகசியங்களை வெளியிட மாட்டேன் என்று பணியிலிருந்து விலகும்போது அளித்த உறுதிமொழியை மீறிவிட்டதால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஸ்ஸனெட்டுக்கு கடற்படையின் வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாதில் அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி அமெரிக்கக் கடற்படையினரால் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் பங்கேற்ற மாட் பிஸ்ஸனெட், "மார்க் ஓவன்' என்ற புனைப்பெயரில் "நோ ஈஸி டே' என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். அதில், ஒசாமா கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர் விவரித்துள்ளார். இது கடற்படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலில் இருந்து மாறுபட்டதால், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் படை வீரர்கள் நடத்திவரும் இணையதளமொன்றில் பிஸ்úஸôனெட்டின் நூலுக்கு எதிராக "நோ ஈஸி ஆப்' என்ற பெயரில் இ-புக் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பிஸ்úஸôனெட்டின் நூல் செவ்வாய்க்கிழமை வெளியாகவிருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக இணையதளத்தில் "நோ ஈஸி ஆப்' என்ற இ-புக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், பிஸ்ஸனெட் தனது குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த பிஸ்ஸனெட், தான் வியாபாரத்தில் ஈடுபடப்போவதாகக் கூறி, தனது பணியை ராஜிநாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, தனது நூலால் சர்ச்சை ஏற்படும் எனத் தெரிந்திருந்தும், ரகசியங்களை வெளியிட பிஸ்ஸனெட் முடிவு செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லேடனை கொன்றதும், அந்த வெற்றியைக் கொண்டாட வெர்ஜினியா கடற்கரையில் அமைந்துள்ள பார் ஒன்றில் கூடிய, பிஸ்ஸனெட் உள்ளிட்ட வீரர்கள், மது அருந்தி கும்மாளத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் உயர் அதிகாரியின் கண்டிப்புக்கு ஆளாகினர் என்றும் அந்த இ-புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசுக்காக எந்த கேவலலத்தையும் அமெரிக்க செய்யும் போது அதன் குடிமக்களும் அப்படித்தானே.காசுக்காக கதை எழுத போய் இனிமேல் அவனால் நிம்மதியாக வாழ முடியுமா?அமெரிக்காவும்,ஐரோப்பாவும் தங்கள் சொகுசு வாழ்வுக்காக
ReplyDeleteஉலக நாடுகளில் வன் முறைகளை தூண்டி நிம்மதியற்ற வாழ்வை நம் மீது திணித்து,சமாதானம் பிடிப்பது போல்
உலக நாடுகளை அடிமை கொள்ள நினைக்கிறார்கள்.உலகம் உருண்டை என்பதை மறந்து விட்டார்கள் போலும்.