Header Ads



இந்திய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்கள் - முல்லைத்தீவு அரச அதிபரின் விளக்கம்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

முல்லைத் தீவு மாவட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் அரசியல் செல்வாக்கினால் முஸ்லிம்களுக்கு  மாற்றப்பட்ட அதிசயம் என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் அறிக்கையொன்றைவிடுத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு திட்டத்தின் 2 ஆம் கட்டமாக 500 வீடுகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எமது மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலகப் பிரிவில் இவை பகிர்ந்தளிக்கப்படுவதற்கான ஏற்பாட்டினை மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நான் செய்துள்ளதுடன்,இது குறித்து ஜனாதிபதி மீள்குடியேற்ற செயலணியின் செயலாளருக்கும் உத்தியோக பூர்வமாக கடந்த 2012.08.27 ஆம் திகதியிடப்பட்டு என்னால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் தற்போது சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முல்லைத்தீவு அரசாங்க அதிபராகிய என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வீடுகள் அனைத்தையும் ஹிஜ்ராபுரம் முஸ்லிம் கிராமத்துக்கு வழங்குமாறு கூறியதாக,நான் தொலைபேசியில் தெரிவித்தாக வெளியிடப்பட்ட செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்ற வகையிலும்,இதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு தோற்றுவிக்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டுவதுடன்,இந்திய வீடமைப்பு திட்டம் குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் என்னுடன் எந்த சந்தரப்பத்திலும் தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் தெரிவிக்கவிரும்புகின்றேன்.

அதே வேளை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகிய எனது தலைமையிலேயே சகல அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன்றன.இந்த அபிவிருத்தி பணிகளுக்கான அனுமதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரான கௌரவ றிசாத் பதியுதீன் அவர்களே வழங்கியுள்ளார்கள்.இது வரையில் அவர் சார்ந்த முஸ்லிம்களுக்கு மட்டும் பணிகள் செய்ய வேண்டும் என்ற எந்த வித பணிப்புரையும் எனக்கோ,எனது அதிகாரிகளுக்கோ வழங்கவில்லை.குறிப்பாக யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைதீவு மாவட்டத்தில் வாழும் சகல சமூகங்களின் மேம்பாடுகளுக்காக அவரது கால நேரத்தை செலவு செய்து வருவதை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளின் விபரம் பின்வருமாறு,

பிரதேச செயலகப் பிரிவு   தெரிவு செய்யப்பட்ட கிராமத்தின் பெயர்   எண்ணிக்கை
கரைதுறைப்பற்று            மதவாளசிங்கன் குளம்                 75
                            ஹிஜ்ராபுரம்                              50
புதுக்குடியிறுப்பு             சுதந்திபுரம் கொலனி                   25
                            சுதந்திபுரம் மத்தி                      25
                            இருது மடு                            25
                            இலங்கோ புரம்                        40
                            தேரவில்                              35
ஒட்டுச் சுட்டான்            கட்சிலைமடு                           50
துனுக்காய்                 ஜய்யன்குளம்                           50
மாந்தை கிழக்கு            பாலி நகர்                              50
வெலி ஓய                 ஜனகபுரம்                              75
                                         
 
என்ற அடிப்பைடையில் இந்த வீடமைப்புத் திட்டம் வழங்கப்படவுள்ளது.1990 ஆம் வடக்கில் நிலவிய அசாதாரண சூழ் நிலை காரணமாக இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் தற்போது தமது சொந்த கிராமங்களில் மீள்குடியமர்ந்து வருகின்றனர்.முற்று முழுதான வீடுகளை முஸ்லிம்களுக்கு  வழங்கியுள்ளார் என்று தெரிவிப்பது அபத்தமானது என தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதனாயகம்,வெளி மாவட்டத்திலுள்ளவர்கள் எவரும் இந்த வீடமைப்புத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் தமது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபரால் ஜனாதிபதி விஷேட செயலணிக்கு அனுப்பப்பட்ட கடிதமும் இத்தடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
 
                            
                            

1 comment:

  1. உடனடியாக செயல்பட்டு உண்மை நிலையை ஆதாரத்துடன் வெளியிட்டு இன வெறியர்களின் முகத்தில் கரி பூசியதற்கு, முல்லை அரச அதிபருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன்,மேலும் இது போன்ற விடயங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் இலங்கை முஸ்லீம்கள் சார்பாக
    கேட்டுக்கொள்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் மீண்டும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

    ReplyDelete

Powered by Blogger.