Header Ads



பசித்த பிராணிகளும், உணவுத்தட்டும்..!


மௌலவி ஏ.ஆர்.எம்.மஹ்ரூப் (கபூரி)
எம்.ஏ (லண்டன்)

வெறி கொண்ட பிராணிகள் உணவுப் பாத்திரங்களை நோக்கி வேகமாகப் பாவதைப் போல மற்ற சமூகத்தவர் ஒரு காலத்தில் முஸ்லிம்களை நோக்கிப் பாய்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எதிர்வு கூறினார்கள். அந்த நிலைமையை இன்று பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது.

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் உம்மத் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் எண்ணிலடங்காதவை. அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை, அகதி வாழ்க்கை, கொலை, கொள்ளை, அழிவு, கற்பழிப்பு, வறுமை, அறியாமை என முஸ்லிம் சமூகத்தின் துன்ப துயரங்களின் பட்டியல் நீளுகின்றது.

சர்வதேச ரீதியில் பலஸ்தீன், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், செச்னியா, சிரியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் அழுகுரல்கள் எமது காதுகளை வந்தடைந்த வண்ணமுள்ளன. அவற்றையெல்லாம் மிஞ்சி விடும் வகையில் மியன்மார் (பர்மிய) முஸ்லிம்கள் மீது படுகொலைகளும் அழிவு நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களை பலாத்காரமாக மத மாற்றுதல் உலகம் எங்கும் இல்லாத வகையில் மியன்மாருக்கே உரிய பாதகச் செயலாக விளங்குகின்றது.

சீன முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இரும்புத் திரைக்குப் பின்னால் அம் முஸ்லிம்களின் மத உரிமைகளும் மனித உரிமைகளும் பலாத்காரமாக மீறப்படுகின்றன. அம்மக்கள் மீதான நீண்ட கால அடக்கு முறைகள் தற்போதுதான் மெல்ல மெல்ல வெளி உலகுக்கு தெரிய வருகின்றன.

அண்டை நாடான இந்தியாவில் இந்துத் தீவிரவாதிகளின் கை எப்போதுமே ஓங்கி இருக்கும். முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு அங்கு குறைவே இருக்காது. பெரும்பாலான மாநிலங்களில் முஸ்லிம்கள் கையாலாகாதவர்களாகவும் அறியாமை, வறுமை என்பவற்றால் பீடிக்கப்பட்டவர்களாகவுமே வாழுகின்றார்கள். இந்தியா மிகவும் பரந்த, விசாலமான நாடு என்பதால் முஸ்லிம்களுக்கு நடைபெறுகின்ற அநியாங்களை வெளியுலகு கண்டு கொள்வதில்லை.

அடுத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் மிக வேகமாகப் பரவி வருவதையறிந்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். மகிழ்ச்சியடையவும் வேண்டும். அதேவேளை இஸ்லாத்துக்கெதிரான தீய பிரசாரங்களும் முஸ்லிம்கள் மீதான துவேஷமும் (கீச்ஞிடிண்ட்) முஸ்லிம்களுக்கெதிரான தேசியவாதமும் (ச்ணாடிணிணச்டூடிண்ட்) வளர்க்கப்படும் இடங்களாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் விளங்குகின்றன. இந்நாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைக்கு ஸியோனிஸமும் தீவிர வலதுசாரிக் கிறிஸ்தவமும் காரணிகளாக விளங்குகின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய நெறி முறைகளைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் கணிசமான அளவு இருப்பதைப் போலவே இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட வழியிலும் குற்றச் செயல்களிலும் பகிரங்கமாக ஈடுபடும் முஸ்லிம்களும் நிறையவே இருக்கின்றார்கள். இவர்களின் பெயர்களையும் இனத்தையும் வைத்தே மேலைத்தேய நாடுகள் முஸ்லிம்களை கணிக்கின்றன. இஸ்லாத்தின் மீது மேலை நாட்டவர் வெறுப்படைய இவர்களின் நடவடிக்கைகள் முக்கிய காரணியாக விளங்குகின்றது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் இந்தியா, பர்மா, சீனா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் வெளிப்படையான வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்வதில்லை.

ஆனால் பொறுப்பற்ற முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் துவேஷத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகி இரண்டாந்தரப் பிரஜைகளாக மேல் நாட்டு சமூகத்தில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். அம் முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை சீர்த்திருத்திக் கொள்வார்களானால் இஸ்லாம் மேலும் வேகமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவும் என்பதில் சந்தேகமில்லை. இது மேல்நாட்டுக்கு மட்டுமல்ல எல்லா நாட்டுக்குமே பொருந்தும்.

அடுத்து ஆபிரிக்கக் கண்டத்தை எடுத்துக் கொண்டால் இதனை முஸ்லிம் கண்டம் என வர்ணிக்கும் அளவுக்கு அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகின்றது. மொத்த ஆபிரிக்காவின் 1051 மில்லியன் மக்களில் முஸ்லிம்கள் 554.32 மில்லியனாகவும் சுதேச நம்பிக்கையைப் பின்பற்றுவோர் 100 மில்லியனாகவும் கிறிஸ்தவர்கள் 304 மில்லியனாகவும் உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் பல ஆபிரிக்க நாடுகளில் கிறிஸ்தவ ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. உள்நாட்டுப் போர்,  கல்வி அறிவின்மை, இன கோத்திர முறுகல் என்பவை முஸ்லிம்களை பின்தங்கிய சமூகமாகவும் கிறிஸ்தவ உலகின் உணவுத்தட்டை போலவும் வாழ வைத்துள்ளது.

சர்வதேச ரீதியில் எமது சகோதர முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற துன்ப துயரங்களையும் அவலங்களையும் விரிவாக ஆராவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவற்றை மேலோட்டமாக தொட்டுக்காட்டிய பின்னர் நம் நாட்டில் நாம் படும் அவஸ்தைகளையும் நாளாந்தம் நாம் எதிர்நோக்கும் சவால்களையும் சற்று விரிவாக நோக்குவதே எமது நோக்கமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் எமது நீண்ட கால வரலாற்றில் ஏனைய சமூகங்களுடனான உறவு பெரும்பாலும் சுமுகமாகக் காணப்பட்டு வந்துள்ளது. எழுபதுகளின் இறுதிப்பகுதியில் புலிகளின் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகும் முன்னர் ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர பெரிய அளவில் முஸ்லிம்களின் இருப்புக்கோ உயிருக்கோ உடமைக்கோ ஆபத்துக்கள் ஏற்படவில்லை. சோந்த மண்ணிலிருந்து  அவர்கள் வெளியேற்றப்படவில்லை.

எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்த போது இலக்கையும் இலட்சியத்தையும் மறந்து தமது துப்பாக்கிகளை நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் பக்கம் நீட்டினார்கள். பசித்த பிராணிகள் உணவுத் தட்டை நோக்கிப் பாவதைப் போல அப்பாவி முஸ்லிம்கள் மீது பாந்து வெறியாட்டம் ஆடினார்கள். அக்காலப்பகுதியில் வட கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் கஷ்ட நஷ்டங்கள் உயிர் உடமை இழப்புக்கள் எண்ணிடலங்காதவை. எதற்கும் ஒரு முடிவு இருப்பதைப்போல் புலிகளின் திசைமாறிய போராட்டத்துக்கும் ஒரு முடிவு வந்தது.

புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இனிமேல் அனைத்து சமூகங்களும் நாட்டின் எந்தப் பகுதியிலும் அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம் என ஜனாதிபதி உட்பட அரச தரப்பினர் யாவரும் அடிக்கடி கூறுவதைக் கேட்க முடிந்தது.

சிறுபான்மையினர் விடயத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் விடயத்தில் இக்கூற்று எவ்வளவு தூரம் பொருத்தமாகவுள்ளது என்பதை நாளாந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்த்தால் வேறு வடிவங்களிலான பயங்கரவாத அச்சுறுத்தலை முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்றனர் என்றே கூற வேண்டும்.
பயங்கரவாதம் என்பது கொலை, கொள்ளை மற்றும் அழிவு நடவடிக்கைகள் மாத்திரமல்ல. வாயினாலோ செயலினாலோ பயமுறுத்தல் விடுப்பதும் பயங்கரவாதமே. அத்தகைய பயமுறுத்தலை முஸ்லிம் சமூகம் நாளாந்தம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

வேறொரு வகையில் கூறுவதனால், முஸ்லிம்கள் புலிகளால் ஒருவகையான பயமுறுத்தலுக்கும் வன்முறைக்கும் ஆளானார்கள். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிங்கள தீவிரவாதிகளால் மற்றொரு வகை வன்முறைக்கு  ஆளாக்கப்படுகின்றார்கள். அனுராதபுரம் முதல் கிண்ணியா அலங்கார வளைவு வரை அவை தொடர்கின்றன. எதுவரை நீளும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சிங்களவர் அனைவரும் முஸ்லிம்களுக்கெதிராக அணி திரளவில்லை என்பது உண்மையானாலும் நாட்டின் சக்தி மிக்க ஒரு பகுதியினர் அனைத்து வசதி வாய்ப்போடும் முஸ்லிம்களுக்கெதிராக திரண்டுள்ளனர். இதில் ஆபத்து என்னவென்றால் இவர்களின் செல்வாக்கு நாளாந்தம் சாதாரண சிங்கள மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றது.

அதே வேளை முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் என்று தம்பட்டம் அடிப்போரின் அறிக்கைகளும் கருத்துக்களும் கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் இருப்பதை பத்திரிகைகள் மூலம் அறிய முடிகின்றது. உதாரணமாக,

* பிரதியமைச்சர் ஒருவர் முஸ்லிம் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் மூதூர் ஜபல் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் கேட்ட வேளை உண்மையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும் ஆதாரங்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார். 

* பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் முஸ்லிம் கட்சியொன்றின்  பெயரைக் குறிப்பிட்டு அக்கட்சி தான் அதனைச் செகின்றதா என  சந்தேதிக்க வேண்டியுள்ளதாகவும் மற்றொரு முஸ்லிம் கட்சியின் தலைவர் கூறுகின்றார்.

* இனவாதிகளால் முஸ்லிம் புனிதத் தலங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. முஸ்லிம் கட்சியொன்றுதான் பள்ளி உடைப்பு வேலையைச் செதிருக்க வேண்டும் என்பதைப் போல அந்த மனிதரின் கூற்று அமைந்திருந்தது.

* மஹிந்த ஆட்சியின் கீழ் எந்த ஒரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. இது முன்னாள் அமைச்சர் ஒருவரின் கூற்று.

* புலிப் பயங்கரவாதத்தை ஜனாதிபதி அவர்கள் ஒழித்துக் கட்டியதைப் போல காவியுடைப் பயங்கரவாதத்தையும் ஒழிக்க வேண்டும். பொறுப்புள்ள முஸ்லிம் அமைச்சரின் பிரகடனம் இது. முன் யோசனை இல்லாமல் பேசினாலும் பின்னர் மன்னிப்புக் கேட்டது பாராட்டுக்குரியது. இது முழு முஸ்லிம் சமூகமும் மன்னிப்புக் கேட்டதற்கு சமமாகும்.

இவை மட்டுமல்ல. மற்றும் பல அரசியல் வாதிகளின் அறிக்கைகள் வீறாப்புப் பேச்சுக்கள் கிண்டல்கள், கேலிகள்.....

இவையெல்லாம் எதற்காக? முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காகவுமா? மற்ற சமூகங்களுடன் நல்லெண்ணத்தையும் வளர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நம் சமூகம் கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காகவுமா? இருக்க முடியாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றவருக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டியவர்கள். இவர்களின் பேச்சு, நடத்தை, நடவடிக்கை யாவும் மற்ற சமூகங்களால் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. அவர்கள் பேசி மறுநாள் பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன. பிற சமூகத்தவர் அவற்றில் அழகையும் பண்பையும் காணாவிட்டாலும் அசிங்கங்களையும் அரசியல் முதிர்ச்சியின்மையும் அநாகரீகத்தையும் காணக்கூடாது. அவற்றை வைத்து  முழு சமூகத்தையும் அவர்கள் தப்புக் கணக்குப் போட இடமளிக்கக்கூடாது.

அதிகாரம், செல்வாக்கு என்பன மிகப் பெரும் அருளும் அதே வேளை அமானிதமுமாகும். இறையருளால் இன்றைய உலமாக்கள் முதல் முஸ்லிம் எழுத்தாளர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என யாவரும் இதனை அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். இது அரசியல்வாதிகள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் அல்ல. நீங்கள் மனம் வைத்து இதய சுத்தியுடன் நடந்து கொண்டால் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுப்பு, மன்னிப்பு என்ற உயர் விழுமியங்களைக் கைக் கொண்டால் சமூகம் உயர்வடையும். பலமும் வளமும் பெறும் என்பதற்காகவாகும்.

மர்ஹூம் அஷ்ரப் தனது கட்சிக்காரர்களை போராளிகளாக விட்டு விட்டுச் சென்றார். சமூக அநீதிகளைக் களையவும் நீதி நேர்மையையும் சமூக ஐக்கியத்தையும் பாதுகாத்து பிற சமூகங்களுடனும் நல்லுறவைப் பேணி முஸ்லிம்களின் கண்ணியத்தைக் காக்க கட்சித் தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் (Struggle) என்ற பதத்தை அவர் பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால் நாம் காணும் போராளிகளின் போராட்டம் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் உடமைக்கும் உரிமைக்கும் மானத்துக்கும் பங்கம் விளைவிக்கும் போராட்டமாகவே அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் பிற சமூகத்தவர் குறிப்பாக இனவாதிகள் எம்மைப்பார்த்து கைக்கொட்டிச் சிரிப்பதற்கும் எமது பலவீனத்தைத் தெரிந்து துணிச்சலுடன் மேலும் எமது உரிமைகளில் கை வைப்பதற்கும் வாப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம்கள் தமக்கிடையே பிணங்கிக் கொள்வதும் பிளவுபடுவதும் உம்மத்தின் தனித்துவத்தையும் சக்தியையும் போக்கி விடும் என குர்ஆன் எச்சரிக்கின்றது. அதை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் காணுகின்றோம்.

மற்றும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் இன்றைய பரிதாபகரமான நிலைக்கான காரணிகள் எவை என்பதை பின்வருமாறு கூறுகின்றார்கள்,
 
பசித்த பிராணிகள் தனது உணவுத் தட்டை நோக்கிப் பாவதைப் போல ஏனைய சமூகத்தவர் (பின்னொரு காலத்தில்) உங்கள் மீது பாவார்கள் எனக்கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சிறு தொகையினராக அப்போது இருப்போமா என நாங்கள் கேட்டோம் என இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் கூறினார். அதற்கு நபியவர்கள் நீங்கள்அதிகம் இருப்பீர்கள் இருப்பினும் வெள்ளத்தில் அள்ளுண்டு போகும் நுரைகளைப் போலிருப்பீர்கள். (நுரைகள் எவ்வளவு பெரும் எண்ணிக்கையாக இருந்தாலும் அதற்கு சக்தி இருக்காது) உங்களுடைய விரோதிகளின் உள்ளங்களிலிருந்து உங்களைப் பற்றிய கண்ணியம் நிறைந்த அச்சம் பிடுங்கப்பட்டுப் போகும். உங்கள் உள்ளங்களில் பலயீனம் ஏற்படுத்தப்படும். பலயீனம் என்றால் என்ன என்று மீண்டும் கேட்டோம். அதற்கு நபியவர்கள் உலக வாழ்வை (அதிகம்) விரும்புவதும் மரணத்தை வெறுப்பதும் எனக்கூறினார்கள்.

இந்த நபி மொழி கூறும் விடயங்கள் யாவும் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் அப்படியே காணப்படுகின்றன.

1. ஏனைய சமூகங்கள் எம்மீது பாய்கின்றன.

2. முஸ்லிம்கள் அதிகமாக பல்கிப் பெருகிப் போயிருக்கின்றார்கள்.

3. வெள்ளத்தின் நுரைகள் போல பலமற்றவர்களாக இருக்கிறோம்.

4. முஸ்லிம்களைப் பற்றி கண்ணியமோ அச்சமோ முஸ்லிம்களின் விரோதிகளிடம் (உதாரணம் இனவாதிகளிடம்) காணப்படுவதில்லை.

5. பெரும்பாலும் முஸ்லிம்களின் உள்ளத்தில் பலயீனம் குடி கொண்டுள்ளது.

6. பலயீனம் என்பது உலக மோகமும் மரணத்தை வெறுத்தலுமாகும்.

உலக மோகம் என்பதை சுருக்கமாக  நோக்கினால் ஒரு முஸ்லிம் உலகத்தை வெறுத்து வாழ வேண்டும் என்பது இதன் கருத்தல்ல. முஸ்லிமின் உழைப்பு, சம்பாத்தியம், தொழில், கொடுக்கல் வாங்கல் போன்ற யாவும் இஸ்லாமிய  வரையறைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். வீண் விரயம், வட்டி, ஆடம்பரம், முகஸ்துதி போன்றவை இவற்றில் காணப்படக்கூடாது. நியாயமான முறையில் எவ்வளவானாலும் செல்வம் சேர்க்கலாம். ஆனால் உரிய முறையில் ஸகாத், ஸதகாக்களாக நிறைவேற்ற வேண்டும். அதில் ஏழைகளுக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் எதிலும் அழகையும் நேர்த்தியையும் பேண வேண்டும். ஆனால் வீடு, வாகனம் போன்றவை ஆடம்பரமாக இருக்கக்கூடாது.  கல்வியில் உயரலாம். உயர் பதவி வகிக்கலாம். ஆனால் அவை மற்றவருக்குப் பயனளிக்க வேண்டும். அதிகாரத்தையும் ஆட்சியையும் விரும்பலாம். அவற்றுக்கான முயற்சி நேரான வழியில் நடைபெற வேண்டும். ஊழல் மோசடி, கழுத்தறுப்பு, இலஞ்சம், போட்டா போட்டி, அநீதி என்பன அவற்றில் சம்பந்தப்படக் கூடாது.

பொதுவாக சுயநலம் பேர் புகழுக்காக செயற்படுதல் முகஸ்துதி யாவும் உலக மோகத்தில் அடங்கும். ஆன்மிக நடவடிக்கைகளாக இருந்தாலும் சரியே. மார்க்கத்தைப் பிரசாரம் பண்ணவும் சமூக அபிவிருத்திப் பணியில் ஈடுபடவும், அனைவருக்கும் உரிமை உண்டு. அதில் இஹ்லாஸ் வேண்டும். மார்க்கத்தை எந்த வகையிலும் வியாபாரமாக்கவும் தனி உடமையாக்கவும் கூடாது. அவ்வாறு செதால் ஹுப்புத்துன்யாவாக அது ஆகிவிடும். பண்பாட்டு வீழ்ச்சி சமூகத்தை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டிருப்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் எப்போதும் தனது இறுதி இலட்சியமாக மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது தான் நற்செயலுக்கும் நற்பண்புகளுக்கும் ஊன்று கோலாக அமையும். கோழைகளும் சுயநலமிகளும் குற்றங்களில் எப்போதும் ஈடுபடுவோருமே மரணத்தை வெறுத்தும் மறந்தும் வாழ்வர். ஆனால் என்றிருந்தும் ஒரு நாள் அதனை சந்தித்தே தீர வேண்டும்.

எனவே நாம் உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் எம்முடையவும் சமூகத்துடையவும் கண்ணியத்தைக் காக்க வேண்டும். மற்றவருக்குப் பயனுள்ள வகையிலும் இறை வழிகாட்டலிலும் எல்லா நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மட்டுமே நாமும் நாடும் சமூகமும் பயனடையலாம். இறைவனிடமும் நற்கூலி பெறலாம்.
 
இன்ஷா அல்லாஹ்.
 

1 comment:

  1. ஓதிப் படித்தவர்கள் தானே தவறுதலாக இஸ்லாத்தைப் புரிந்து பணக்காரர்களின் காலடியில் தலை வணங்கி மண்டியிட்டு கிடக்குகிறார்கள்.ஜகுவார்,பி எம் டபிள்யு இது போன்ற ஆடம்பரக் கார்களில் இலங்கையில் புகளின் உச்சத்தில் இருக்கும் முப்திகளில் ஒருவரை முன் இருக்கையில் அமர்த்தி எந்த முதலாளி பஜாரில் வருகிறாரோ
    அவர் தான் சொர்க்கவாசி என்ற மனோ நிலையில் இருப்பவர்கள் தான் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம்.
    இது இல்லை என்று மறுக்கவே முடியாது.
    ஹக்கீம் மன்னிப்பு கேட்டது முழு முஸ்லிம்களும் மன்னிப்புக் கேட்டதற்கு சமம் என்று எழுதியிருக்குகீர்கள்.
    அதை வைத்து இப்படி ஒருவர் எழுதி விட்டார் தலைக்கணம் பிடித்து ஹக்கீம் மேடைகளில் உளறிக் கொட்டாமல்
    இருந்தால் சரிதான்.
    நீங்கள் எழுதியவற்றில் 99 % உண்மை.ஆனால் நாம்?மார்க்கத்தின் பெயரை சொல்லி மேலும்,மேலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிக் கொண்டிருக்கிறோம்.ஜிஹாதுக்குரிய விளக்கம் மேற்கத்திய பயங்கரவாத ஊடகங்களினால்
    தவறாக சித்தரிக்கப்படுவதும்,முஸ்லிம்கள் மீது வெறுப்புக்கொள்ளவும்,இஸ்லாம் பரவுவதை தடுக்கவும் காரணமாக
    உள்ளது .

    ReplyDelete

Powered by Blogger.