Header Ads



''சூரியனைப்பார்த்து ஊளையிடும் நரிகள்''

 
 
'காத்தநகர் முகைதீன்சாலி'
 
உணர்வுகள் பொங்கி உயிரைக்குடிக்கிறது
கண்களில் குருதி கண்ணீராய் வடிகிறது
இதயம் எங்கிலும் உறைந்து கிடக்கும்
எம்மான் புகழை நசுக்கும் போது!

இதயம் வலிக்கிறது இரத்தம் கொதிக்கிறது
இறைவனின் தூதர் எம்பெருமானை
இழிவாய் யாரும் இகழ்ந்து விடின் 
மற்றவை மறந்து மனசு உடைகிறது!

உடலை இயக்கும் உயிரை விட  
உறவை உணர்த்தும் தாயைவிட 
உறவில் உயர்ந்த தந்தையைவிட 
உத்தம நபி மேல் அன்பு எமக்கு!

நாஸ்திகம் பேசும் நாய்கள் எழுந்து
அமெரிக்க அரக்கன் தலைமையிலின்று 
சீமான் நபியை சினிமா எடுத்த    
செய்தி கேட்டு இதயம் வெடிக்கிறது!

கலிமாச் சொன்ன ஒவ்வொரு உயிரும்
கருணை நபிமேல் காதல் கொள்கையில்
காட்டுமிராண்டிக் கூட்டம் நபியை
கொச்சைப்படுத்த விடுமா நம் ஈமான்?

மனதில் தோய்ந்த கறையை அகற்றி
மடைமைப்  பேயை தூர விரட்டி   
புனிததீனை பூக்கவைத்த பூமான்பெருமை
கழுதைகளுக்கெங்கே புரியப்போகிறது?

அகிலம் படைத்த அல்லாஹூத்தஆலா
அருட்கொடையாய் அத்தாட்சிப்படுத்திய
அண்ணல் நபியை இழிந்துரைக்க 
அற்பப்பிராணிகளுக்கு என்ன துணிவு?

முஸ்லிம் உம்மா சும்மாயிராது.....  
முஹம்மது நபியில் முள் பட்டாலும்
தன்னுயிர் போக்க துணிந்த மக்களை
கொண்டதிந்த இஸ்லாம் மார்க்கம்!

ஒளியின் பிளம்பாய் உலகிலுதித்த
உத்தமத் தூதர் எம் பெருமானை  
இருளே சூழ்ந்த இதயமுள்ளோர்
இழிந்துரைப்பது வேடிக்கையன்றோ!

தீயில் எம்மை எரித்திட்ட போதும்  
இரண்டு துண்டாய் பிழந்திட்ட போதும்
இதயத்திலுள்ள நபியின் அன்பை
அணுவளவேனும் அகற்றிட முடியாது!

இனியும் எங்கள் நபியின் புகழை 
அழித்திட கயவர் துணிவு கொண்டால்
ஒற்றுமையென்னும் கயிறு கொண்டு 
கயவர்  கூட்டத்தை கட்டத் துணிவோம்!

அடுக்கடுக்காய் சூழ்ச்சி செய்து
அகிலமெங்கும் முஸ்லிம் உலகை
அணுவணுவாய் பிரித்து வைத்தாய்
அறிவில்லாத அமெரிக்காவே!

சூழ்ச்சிக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன்   
உன் சூழ்ச்சியைக் கொண்டே      
ஒன்று சேர்த்தான் முஸ்லிம் உலகை 
இன்று உனக்கு எதிராகவே!

அடங்கிவிடு அமெரிக்காவே!

அகில உலகின் அதிபதியின் 
அன்புக்குரிய அடியானை நீ   
அவமதித்த குற்றத்திற்காய்      
ஆட்டம் காண்பாய்  சீக்கிரத்தில்!

No comments

Powered by Blogger.