லிபியா நோக்கி அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைவு
எகிப்து, லிபியாவின் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து ஆத்திரமடைந்த அமெரிக்கா, தனது இரு போர்க்கப்பல்களை லிபியா கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. நேற்று எகிப்து, லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்காவிற்கான லிபிய தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் பலியாயினர். இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அமெரிக்கா தனது இரு போர்க்கப்பல்களை லிபியா கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.இது குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜியார்ஜ்லிட்டில் கூறுகையில்,
அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர்ஸ்டீவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து லிபியாவிற்கு கலவரத்தடுப்பு கப்பற்படையினர் 50 வீரர்களுடன் இரு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள், தூதர் கொல்லப்படுவதற்கு முன் எப்படி கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு வளையத்தினை மீறி தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தானில் கொலை, கற்பழிப்பு என்று செய்து அலுத்துப் போன அமெரிக்க, இப்பொழுது லிபியாவை நோக்கி நகர்கின்றதோ?
ReplyDeleteஏனைய இஸ்லாமிய நாடுகளில் வங்குரோத்து ஆனது போதாது இப்போது அவனுகளின் கணிப்பின் படி நேரம் வந்தது விட்டது கத்தாபியுடன் அவர் ஆட்ட்ச்சிக்கு கீழ் சகலவத்தையும் அனுபவித்துவிட்டு அவரை கொன்றுவிட்டு இப்போ கைம்மாறு வாங்க வந்திருக்கும் அமேரிக்கா லிபியாவின் கூட்டிகொடுத்த படைக்கு லாடன் அடிப்பதற்கு வந்து இன்னும் இஸ்லாத்தையும் அளித்து அப்பவுப்பெங்களுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் படம் மது பிக்கினி கொடுத்து கெடுக்கவும் பழைய நண்பர்களையும் நல்ல முஸ்லீம்களையும் கொன்று சிறைப்பிடித்து சித்திரவதை செய்யவும் நேரம் வந்துவிட்டது லிபியாவின் எண்ணையை தமதாக்கும் நேரம் வந்துவிட்டது மனிதன் மனிதனை சாப்பிடும் நேரம் முஸ்லீம் முஸ்லீமை ஈராக் ஆப்கனிஸ்தான் போன்ற இடங்களில் அழிப்பது போல நேரம் இது ஆனால் இவர்களின் பரம விரோதிகளும் இதில் பழி வாங்கப்படலாம் வாழ்க கத்தாபி அனுதாபிகள்
ReplyDeleteகடாபியை கவுட்டுவதட்கு ஆயுதம் கொடுத்தவர்களுக்கே ஆப்பு.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உலகின் தரமான
ReplyDeleteபெற்றோலை கொள்ளையடிக்க உலக கொள்ளையர்கள் புறப்பட்டு விட்டனர்.ஈரானுக்குள் நுழைவதற்கும் அருமையான திட்டமிட்ட நிகழ்வு.
பொறுமையை ,தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள் மார்க்கம் சொல்லுது .ஆனால் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்ததால்
திறந்த வீட்டுக்குள் நாய்கள் நுழைவது போன்று நுழையப் போகிறார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்(லா தஹ்சன் இன்னல்லாஹ் ம அனா)