Header Ads



மோலியாவின் புதிய ஜனாதிபதி தற்கொலை தாக்குதலில் உயிர் தப்பினார் (வீடியோ)

சோமாலியாவின் ஹோட்டல் மீது  நடத்த தற்கொலை படை தாக்குதலில் அந்நாட்டு அதிபர் உயிர்தப்பினார். சோமாலியாவின் புதிய அதிபராக தேர்தல் மூலம் 10-ம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹாசன்ஷேக்முகமத்(57) .
 
சோமாலியாவிற்கு ‌கென்யா வெளியுறவுத்துறை அமைச்சர் சாம்ஓங்கேரி வந்திருந்தார். தலைநகர் மொகாதிசு நகரில் உள்ள ஹோட்டலில் இவரும் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அப்போது  தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் ஹாசன்ஷேக் முகமது, கென்யா வெளியுறவு அமைச்சர் ஆகியோர் உயிர்தப்பினர். இத்தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய , அல்ஷெபா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
 
 

No comments

Powered by Blogger.