மு.கா. அரசுடன் இணைவதற்கு கட்சியின் உயர்பீடம் ஹக்கீமுக்கு அனுமதியளித்ததா..?
நவமணி
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் பதவி எதனையும் ஏற்காது நடுநிலை வகிக்க வேண்டுமென புதனன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூடத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியதை அடுத்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மக்கள் வழங்கிய ஆணை அரசுடன் இணைவதற்கல்ல. என நாம் எந்த ஒரு பக்கமும் சாராது நடுநிலையாக நின்று விடயத்துக்கு விடயம் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கூறினர்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் அமைச்சர் பதவியேற்கவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் மு.கா.வும் சிங்கள அமைச்சரொருவரும் இருந்து செயற்படுவது தமிழர்களது உரிமையை மறுக்கும் செயல் என்றும் பலர் குறிப்பிட்டனர்.
கட்சியின் அரசியல் உயர்பீடத்தை கூட்டி முடிவெடுக்காது அரசுக்கு ஆதரவு வழங்க எவ்வாறு முடிவெடுக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அநேகர் மௌனம் காத்த நிலையில் தலைவர் கூட்டத்தை வியாழன் வரை ஒத்திவைத்தார்.
கூட்ட ஆரம்பத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றி அரச தரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பற்றி எல்லாம் விபரித்ததோடு தற்போது நாட்டில் நிலவும் சூழல் கல நிலவரங்களை கருத்திற் கொண்டு பாராளுமன்ற குழுவின் ஆலோசனையோடு அரசுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை எடுத்ததாக குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன் ஒரு கதை,பின் இன்னொரு கதை ,அப்பால் புது விளக்கம், மீண்டும் புது வகை நியாயப்படுத்தல்....எத்தனை நாடகங்களைத்தான் நாங்களும் பார்த்துத் தொலைப்பது?,நீங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கத்தான் போகிறீர்கள்.ஆகையினால் இப்படி வேளைக்கு வேளை புதுப் புது கதைகளுடன் எங்களை இம்சைப் படுத்தாமல் இனியாவது நிறுத்துங்கள் உங்களின் கபட நாடகங்களை.. அல்லாஹ் உங்களை மன்னிப்பான் என்று நம்புகிறீர்களா?.... அவன் சகலதும் அறிந்தவன்.
ReplyDeleteயப்பா.. கண்ணக்கட்டுதே!!
ReplyDelete