ஜனாஸா நிகழ்வில் தற்கொலை தாக்குதல் - 25 பேர் மரணம், 50 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில், இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் மீது, தலிபான் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில், 25க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்; 50 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் செயல்படுபகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதிச் சடங்குகள் நடக்கும் இடங்களில், திடீரென புகுந்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பலரையும் கொன்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று, துர்பாபா மாவட்டம், ஷாகை பகுதியில், முக்கிய பிரமுகர் ஒருவர் இறந்ததை அடுத்து, அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாகாண கவர்னர் உட்பட பலர், இதில் பங்கேற்றிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென புகுந்தகள் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில், 25 பேர் பலியாயினர்; 50 பேர் காயமடைந்தனர்.

Post a Comment