Header Ads



முஸ்லிம் சேவை கட்டணம் 100 வீதம் அதிகரிப்பு - ஊழியர்களுக்கோ சம்பளம் இல்லை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான புதிய கட்டண விபரங்கள் அடங்கிய பட்டியல் கூட்டுத்தாபனத் தலைவரால் அதன் வர்த்தகப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய சேவைகளின் வர்த்தக விளம்பரக் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செயப்படவில்லையென தெரியவந்திருக்கின்றது.
 
இது தொடர்பாக முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்கள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரோடு தொடர்பு கொண்டு கேட்டபோது, முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் விளரம்பரங்களுக்கான கணட்டங்களை அதிகரிக்கவேண்டிய தேவை தமக்குள்ள அதேவேளை தங்களது விளம்பரங்களை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்ப வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கும் உள்ளதெனப் பதிலளித்துள்ளார்.
 
மேலும் இலங்கை வர்த்தக யுகத்தை பொறுத்த வரையில் முஸ்லிம்களிடையே அதிக பணவசதி உள்ளதாகக் கூறியுள்ள அவர் அவற்றினைச் செலவிடுவதில் என்ன தவறெனக் கேட்டுள்ளார்.
 
இந்த அநீதியான பாரபட்சமான விளரம்பரக் கட்டண உயர்வு காரணமாக முஸ்லிம் நிகழ்ச்சியில் தங்களது விளம்பரங்களை ஒலிபரப்ப முடியாத நிலைமை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இது இவ்வாறிருக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருமானத்தில் முஸ்லிம் சேவையின் வருமானமே அதிக பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. இருப்பினும் அங்கு கடமை புரியும் முஸ்லிம்களின் நால்வர் மட்டுமே நிரந்தர சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளனர், ஏனையோர் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். அத்துடன் இவர்களுக்கு ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற எந்த வித வசதிகளும் வழங்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை முஸ்லிம் சேவைக்கான விளம்பரக் கட்டணங்கள் மாத்திரம் இந்த ஆண்டு ஜனவரியில் 5 வீதத்தினாலும், மார்ச்சில் 20 வீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
 
இந்தக் கட்டண அதிகரிப்பு தமிழ், சிங்கள சேவை நிகழ்ச்சிகளுக்கு மேற்கொள்ளப்படாததுடன், தமிழ் சேவையில் கட்டணம் ஏதும் அறவிடப்படாத நிலையில் கோயில் திரு விழாக்களின் நேரடி ஒலிபரப்புக்களும் ஏனைய நிகழ்ச்சிகளின் ஒலிபரப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கூட்டுத்தாபனத் தலைவரின் புதிய சுற்று நிருபத்தின்படி 4500 ரூபாவாக உள்ள 15 நிமிட கட்டணங்கள் 7500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளன. வரிகள் சேரும்போது கட்டணம் மேலும் அதிகரிக்கும். அத்தோடு 7500 ரூபாவாக தற்போதுள்ள அரை மணித்தியால கட்டணங்கள் 15000 ரூபாவாகவும், 16,000 ரூபாவாக உள்ள ஒரு மணித்தியாலயக் கட்டணங்கள் 30,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
 
அத்தோடு நேரடி ஒலிபரப்புக்கள், பள்ளிவாசல், பொது அமைப்புக்களின் ஒலிபரப்புக்கள் தொடர்பிலும் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
 
நவமணி
 

6 comments:

  1. முழு நாட்டுக்குமான தெளிவான தரமான பல அரச, தனியார் வானொலி சேவைகள் இந்நாட்டில் இருந்தும் நமது முஸ்லிம் சமூகத்துக்கென்று இவ்வாறான ஒரு முதல்தர வானொலி சேவை இல்லாது துரதிஷ்டமே, அவ்வாறு இருந்திருந்தால் ஏன் இவர்கள் பின்னால் நாம் செல்ல வேண்டும் நமது கல்விமான்கள் வர்தகர்கள் சிந்திப்பார்களா?

    ReplyDelete
  2. போட்டிக்கு இன்னொரு முஸ்லிம் சேவை பண்பலை வானொலி இல்லாததும் இனவாதமும் இவரின் திமிரான பேச்சு,நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் எந்தப் பாரபட்ஷமும் காட்டப்படவில்லை என்று அமைச்சர்கள் மேடைக்கு மேடை கிழக்கில் பறைசாற்றி வரும்போது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களும் ஆலோசனைகளும் அர்த்தமற்றவை.

    ReplyDelete
  4. குமுறும் நெஞ்சம்
    இவ்வாறு அநியாயம் நடக்கும் போது எல்லா முஸ்லிம்களும் தெளிவாக சிந்திக்க வேண்டும்
    சொந்த சுயநல நோக்கை விட்டுவிட்டு பொதுநலமாக சிந்திக்க வேண்டும், உடனடியாக செய்யவேண்டியது எல்லா முஸ்லிம் வர்த்தகர்களும் விளம்பரம் கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் . இனவாத ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும். முஸ்லிம்களின் குரலாக தனியான ஒரு ஊடகம் ஆரம்பிக்கப்படவேண்டும் முஸ்லிம்களின் பணத்தில் காலத்தை ஓட்டும் இவ்வாறான இனவாத அதிகாரிகளின் திமிரை அடக்க ஒட்டுமொத்தமாக அரச வானொலியை புறக்கணிக்க வேண்டும் இது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தின் இன்னொரு வடிவமே . அண்மையில் கொழும்பின் முதல்தர தேசிய பாடசாலையான றோயல் கல்லூரியின் தமிழ் பிரிவிற்கு உப அதிபராக தர அடிப்படையிலும் முன்னுரிமை அடிப்படையிலும் முஸ்லிம் ஒருவர் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டார். பின்னர் கல்லூரி அதிபரினால் எமக்கு முஸ்லிம் அதிபர் தேவை இல்லை என கல்வி அமைச்சின் செயலாளருக்கு வாய் மூலமாக அறிவிக்கப்பட்டு அவரின் நியமனம் கேள்விக்குறியாகியுள்ளது . இது மட்டும் அல்ல இதை போல் பல உள்ளன . பதவிக்கும் பவிசுக்கும் வால்பிடிக்கும் தலைவர்களும் அமைச்சர்களும் உலமாக்களும் முக்கியமாக இவற்றறை எல்லாம் மூடி மெழுகும் வாய்ச்சவடால் உலமசபையும் உள்ளவரை குறிப்பாக தம்மிடையே போட்டியிட்டு காட்டிக்கொடுத்து தமது தேவைகளை பூர்த்தி செய்யும் முஸ்லிம்கள் உள்ளவரை இவ்வாறன நிகழ்வுகள் தொடரும்

    ReplyDelete
  5. AssalamuAlaikum

    Yaa Umma,

    Muslim Kalukku thaniyana oru Vanoli Sevai Uruwakka Ellorum munwara wendum, Appozu Muslim kaludaiya Panamum Muslim kalukkuthane.
    Thamazikka wendam Sindiungal Seyal Padunga.

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.
    இஸ்லாம் என்ற பெயரில் குர்ஆனையும் ஹதீஸையும் விற்பனை செய்வதே அந்த சேவையினூடாக நடக்கிறது.
    சமூகத்துக்கு எந்த பயனும் அதில் இல்லை.
    உம்ரா செய்வது பர்ளு என்று பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி கடன் பெற்றாவது உம்ரா செய்ய வேண்டுமென்று பொய் பிரச்சாரம் செய்யும் இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் எடுத்தாலும் தவறில்லை.
    இதனால் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தப் பாதிப்புமில்லை. அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ள நேரம் தாராளமாக போதும். உங்கள் வியாபாரத்துக்கு நஷ்டம் ஏற்படுவதனை மறைத்து இதனை ஒரு இனவாத
    பிரச்சினையாக மக்களுக்கு காட்ட முற்பட வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.