பொருத்தமற்ற வார்த்தைகளை கூறிவிட்டு பின் மன்னிப்பு கேட்பது அரசியலில் சாதாரணம்
TN
நாட்டில் இனங்களுக்கு இடையில் இன ரீதியான பிரிவினைகளை ஏற்படுத்த சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்துறை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.பொது மக்கள் இந்த விடயம் தொடர் பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், நாட்டில் அமைதியான சூழல் நிலவும் தற்போதைய நிலையில் சக வாழ்வே மிக முக்கியமான ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த வாராந்த செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இனங்களிடையே சக வாழ்வை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாம். ஆனால் சிலர் இதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இனவாதத்தை காண்பித்து ஒரு போதும் இந்த பயணத்தை கொண்டு செல்ல முடியாது. அரசியல் இலாபத்துக்காக சிலர் கொழும்பில் ஒன்றையும், ஊர்களில் மற்றுமொன்றையும் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் இன்னுமொன்றை யும் கூறி வருகின்றனர். ஆனால் இவைகள் அனைத்தும் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வெளிக் கொண்டு வரப்படுகிறது.
பொருத்தமில்லாத சில வார்த்தைகளை பிரயோகித்து, பின்னர் அதற்காக மன்னிப்பையும் கோரி வருகின்றனர். இது அரசியலில் சாதாரண ஒரு விடயமாகும். எது எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம் கள் இது தொடர்பில் மிகவும் தெளிவுடன் இருக்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த வெளிநாட்டு கொள்கை, முஸ்லிம் நாடுகளுடனான சிறந்த உறவுகளின் வெளிப்பாட மனித உரிமைகள் பேரவையில் அரபு உலகம் இலங்கைக்கு ஆதரவாக வாக்குகளை அளித்தமையாகும். இதனை அனைவரும் கருத்திற் வேண்டும் என்றர்.

Post a Comment