தம்புள்ளயில் கட்டிடங்கள் உடைப்பு - ஊடகவியலாளர்கள் பார்வையிட தடை - பள்ளிவாசலின் கதி..?
தகவல் - GTN
தம்புள்ள புனித பூமியின் நிர்மாணிப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்காக கண்டலம சந்தியில் உள்ள வீடுகள் பெக்கோ இயந்திரங்கள் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இந்தப்பிரதேசத்தில் முஸ்லீம் மக்களால் பேணப்பட்டு வரும் முஸ்லீம் பள்ளிவாசலும் நிரந்தரமாக அகற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை இந்த பிரதேசத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் ஒரு பதற்றமான சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
தம்புள்ள நகர முதல்வர் மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவான பிரபல அரசியல்வாதிகள், பிரதேச அரசியல்வாதிகள் அனைவரும் ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு கண்டலம பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் செய்திகளை சேரிக்க வேண்டாம் எனவும் கோரி வருகின்றனர்.

இது மட்டுமல்ல இன்னமும் இருக்கிறது...
ReplyDeleteதம்புள்ளையில் இருக்கும் முஸ்லிம்கள் தொழுகைக்காக எங்கே செல்கின்றனர்? பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாமே.
ReplyDelete