Header Ads



சவூதி அரேபியா அரசாங்கத்திற்கு பிடிக்காத வார்த்தைகள்

சவூதி அரசாங்கமானது .gay, .islam, .bar, .baby என முடிவடையும் இணையத்தள முகவரிகள் உபயோகத்துக்கு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைப்பான Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) .com, .org என முடிவடையும் இணைய முகவரிகளைப் போல .gay, .islam, .bar, .baby போன்ற சுமார் 1,927 வார்த்தைகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது.

ஆனால் புதிதாக உபயோகப்படுத்தப்படவுள்ள சில வார்த்தைகளுக்கு பல நாடுகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகிக்கின்றது. .gay என்ற வார்த்தை கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதுடன் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்குமென எச்சரித்துள்ளது.

இதேவேளை .islam என இணையமுகவரியைப் பயன்படுத்துவது ஏற்றதல்ல எனவும் தனிப்பட்ட அமைப்போ, நபரோ இம்முகவரியைப் பயன்படுத்தும் போது அது மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பிரதிபலிப்பதாக அமையும் என சவூதிஅரசு தெரிவிக்கின்றது.

மேலும் .baby போன்ற பெயர்களை ஆபாச  இணையத் தளங்கள் பயன்படுத்தும் சாத்தியக்கூறு நிலவுவதாக சவூதி அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதைத் தவிர .shia என்ற வார்த்தைக்கும் சவூதி அரசாங்கம் தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது.

VI..

2 comments:

  1. Yes i agree with saudi arabian rules.Modern modern civilaizen world mean women and women marry,man to man marry this kind of stupid haram things must avoid completly muslims countries.We no need to hear GAY stupid words.

    Insha allah we will wait big distroy soon can see anywhere in the world soon,Haram things to much everyday infront our eyes happend.Father or mother can´t walk together with there childrens on the street man kiss another man,women another women.

    ReplyDelete
  2. சவூதி அரேபியாவின் நிலைப்பாடு சரியானதே.

    ReplyDelete

Powered by Blogger.