பாகிஸ்தான் விமான நிலையம் மீது தாக்குதல் (வீடியோ)
பாகிஸ்தானின் காம்ரா விமானப்படை தளம் மீது இரண்டாவது முறையாக ஆயுதம் ஏந்திய நபர்கள் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் சேதமடைந்தன. தாக்குதலில் ஈடுபட்ட 7 ஆயுதம் ஏந்திய நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகர் அருகே பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 80 கி.மீ.தொலைவில் உள்ள ‘கம்ரா’ என பாகிஸ்தான் விமானப்படைத்தளம் ,தகுந்த பாதுகாப்புடன் உள்ள இந்த விமானப்படைத்தளத்தில் 30--க்கும் மேற்பட்ட போர்விமானஙகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விமானப்படைதளம் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் ராணுவ சீருடையில் துப்பாக்கியுடன் புகுந்த 10 முதல் 15--க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திகள் திடீர் தாக்குதல்நடத்தினர். வெடிகுண்டுகளும் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் சீன நாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் எப்-17 உள்ளிட்ட ஜெட்விமானம் எனப்படும் போர்விமானங்கள் பல சேதமடைந்தன.இது குறித்து டி.வி. சானல் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
ஆயுதம் ஏந்திய நபர்கள் பஞ்சாப் மாகாணத்தின் பின்ட்- சுலைமான்- மக்கான் கிராமம் வழியாக , கம்ரா விமானபடை தளத்திற்குள் புகுந்துள்ளனர். இங்குள்ள கிராமவாசிகளின் உதவியுடன் தான் இவர்கள் விமானப்படைதளத்திற்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் சம்பவம் நடந்து வருவதை அறிந்ததும்,பாக். ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ வீரர்கள் ,கம்ராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றிருக்கலாம் எனவும், உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை. ஆயுதம் ஏந்திய நபர்கள் பாக். ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தாகவும், ஏற்கனவே உளவுத்துறை காம்ராவிமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தாக்குதல்நடத்துவதற்கான காரணம் என்னவென்று அந்த டி.வி. சேனல் செய்தி வெளியி்ட்டுள்ளது.
இரண்டாவது முறை கம்ரா விமானப்படை தளம் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதலுக்கு ஆளாவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

Post a Comment