மாணவர்கள் சகலருக்கும் லெப்டொப் - ஹம்பாந்தோட்டையில் உற்பத்தி நிலையம்
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு மடிக் கணணிகளை பயன்படுத்தி கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இது தொடர்பான முதற்சுற்று பேச்சுவார்த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ளது.
உத்தேச திட்டத்திற்காக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கணணி உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இத்தகையதொரு திட்டத்தை செயற்படுத்தும் ஆசிய நாடு என்ற வகையில் கல்வித்துறை அடையும் மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்

நுரைச்சோலையில் உருப்படியாக மின்சாரம் உற்பத்தி செய்ய தெரியாத அரசாங்கம், ஹம்பாந்தோட்டையில் மடிக் கணணி உற்பத்தி செய்யப் போகின்றதா?
ReplyDeleteஅடிக்கின்ற கொமிசன் எல்லாம் அடித்து முடிந்து, கடைசியில் மாணவர்களுக்கு கல்குலேட்டராவது கிடைக்குமா?