சூறாவளி சுற்றுப்பயணத்தில் அமைச்சர் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு, அது கலைக்கப்படலாம் என யூகம் நிலவியதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மூன்று மாதங்களுக்கு மேலாக அந்த மாகாணத்திலுள்ள முஸ்லிம், சிங்கள பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்த வரிசையில் சென்ற வாரம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தங்கியிருந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த அமைச்சர் ஹக்கீம் கொழும்பு திரும்பி அங்கு இரண்டு நாட்கள் தங்கி உத்தியோக பூர்வ நடவடிக்கைகளை அவசர அவசரமாக கவனித்துவிட்டு, மறுபடியும் கிழக்கில் பிரசார பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
தோப்பூர் இப்தார் நிகழ்வில் பங்கு பற்றி அப்பிரதேசத்தில் கட்சியின் பிரசாரப்பணிகளை முடுக்கிவிட்ட மு.கா. தலைவர் மறுநாள் ஏறாவூரில் கட்சியின் பிரதி;த்தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமத் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வோடு ஒட்டிய பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்பி , தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னால் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன், திருகோணமலை வேட்பாளர் ஹஸன் மௌலவி (அஸ்ஹரி), ஏனைய வேட்பாளர்கள் சிலர் உட்பட கட்சி ஆதரவாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
11ஆந் திகதி காலையில் கல்குடாத்தொகுதியில் செம்மண்ஓடை கிராமத்தில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர் ஹக்கீம், வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய இடங்களில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலரையும் சென்று சந்தித்தார்.
பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, பாலக்காடு, நாவலடி, மீறாவோடை, பதுரியா, மாஞ்சோலை போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளவேண்டிய கட்சி கட்டமைப்பு நடவடிக்கை பற்றியும் அவர் ஆராய்ந்தார். இதே வேளையில் கல்குடா தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட்டாக பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாலையில் காத்தான்குடியில் காங்கேயன் ஓடைக்குச் சென்ற அமைச்சர் ஹக்கீம், மருதமுனை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அங்கு மிகவும் காரசாரமான உரையொன்றையும் ஆற்றினார். அந்நிகழ்விலும் மு.கா. பாராளுமன்ற உறுபினர்கள் சிலரும், கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து புறப்பட்டு மத்திய முகாமுக்குச் சென்ற அமைச்சர் ஹக்கீமும் குழுவினரும் பொதுக் கூட்டமொன்றில் பங்குபற்றினர். அதில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, ஏராளமான சிங்களவர்களும் கலந்துகொண்டிருந்த படியால் அமைச்சர் ஹக்கீம் சிங்களத்திலும், தமிழிலும் உரையாற்றினார்.
அமைச்சர் ஹக்கீம் இந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் இம்மாதம் 18 ஆந் திகதிவரை பிரசார, மற்றும் கட்சியின் கட்டமைப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளார். அவரது அடுத்த கட்ட கிழக்கு மாகாண சூறாவளி பிரசார பணிகள் ஈதுல் பித்ர் பெருநாளை தொடர்ந்து மறுபடியும் ஆரம்பமாகவுள்ளது.






nshallah நாம் வெல்வோம்
ReplyDeleteAameen
ReplyDeleteGood Luck SLMC
ReplyDelete