Header Ads



மட்டு உன்னிச்சை பள்ளிவாசல் தீவைப்பு - முஸ்லிம்களை நிதானத்துடன் செயற்பட கோரிக்கை

உன்னிச்சைப்பிரதேசத்தில் கணித்தகராரு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சிணையினையடுத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.   இப்பிரச்சிணை மூலம் சிலர்  தமது சுயலாபங்களை  அடைவதற்காக வேண்டி இனமுறுகளை ஏற்படுத்தி குளிர்காய முனைந்துள்ளனர்.

இதுவிடயம்  தொடர்பாக உடனடியாக கிழக்குப்பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல்  லால் பெரேராவுடன் தொடர்பு கொண்டு களந்தாலோசனை  மேற்கொள்ளப்பட்டதின் அடிப்படையில் மீண்டும்  சேதமாக்கப்பட்ட  பள்ளிவாசல் உள்ளிட்ட  முஸ்லிம்களது சொத்துக்கள் தற்போது இராணுவத்தரப்பால் புணர் நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது. 

எனவே  முஸ்லிகள் இப்புனித மாதத்தில் கற்றுக்கொண்ட  பொருமையினை  படிப்பினையாக  கொண்டு நிதானத்துடன் செயல்படுவதுடன் இத்தகைய விசமிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி குழப்பங்களுக்கு வழிவகுக்க வேண்டாம்  என்றும்  கேட்டுக்கொள்வதுடன், குறித்த பிரச்சிணைகளுக்கு காரணமானவர்களை  கண்டு பிடித்து சட்டத்துக்கு முன் நிருத்துவதாகவும் கட்டளைத்தளபதி எமக்கு  வாக்குருதியளித்துள்ளார் என்பதனையும்  தெரிவித்துகொள்கின்றேன்.


அஷ்-ஷெய்ஹ் ஜுனைட் நளீமி
கிழக்குப்பிராந்திய  பொருப்பாளர்
முஸ்லிம்  சமய  பண்பாட்டளுவள்கள் திணைக்களம்.

No comments

Powered by Blogger.