உன்னிச்சை பள்ளிவாசல் தீவைப்பு குறித்து பொலிஸாரின் அறிக்கை
உன்னிச்சை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் - சிங்களவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ஆனால் குறித்த பகுதியில் சிங்களவர்கள் எவரும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment