Header Ads



கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைப்போம் - சம்பந்தன்

TM

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நாங்கள் ஏற்கெனவே பேசியுள்ளோம்.  எங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில், கிழக்கு மாகாணசபையில் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்போம்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ளமுடியம் என்றார்.

6 comments:

  1. முஸ்லீம்களை வெறுக்கிறேன் இனவாதம் கக்கும் கூத்தமைப்பு எம் பி சிறிதரன்
    முஸ்லீம்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் கூத்தமைப்பு எம் பி இரா சம்மந்தன் ஐயா
    இவர்களை எல்லாம் நம்பியா முஸ்லீம் தலைமைகள்................

    ReplyDelete
  2. Surely to reunite North and East, then only the dream of both Hakeem and Sambandhan will come true.

    ReplyDelete
  3. எதட்கு மன்னார் உப்புகுளத்தை போல் முஸ்லிம்களிடம் இருந்து சட்டபடியே வளங்களையும் காணிகளையும் பறித்து அபகறித்து உங்களின் நிறந்தர அடிமைகளாகவே மாற்றுவதட்கா??? நீங்கள்தான் இப்படி சொல்கிறீர்கள் உங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கபடும் என்று மரகட்சிகாரர் முழங்கி அறிக்கைவிட்டால் போதும் அப்புரம் மரதிட்கு ஆயிரம் வாக்கு கூட கிடைக்காது கிழக்கு மாகாணசபை தேர்தலில்???

    ReplyDelete
  4. ஐயா சம்பந்தன் அவகளே!
    மு. கா. அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுவிடக் கூடாது, மக்களை வெறுப்பேற்றி மு.கா. விடமிருந்து தூரமாக்க வேண்டும் என்று நீங்கள் போடும் தாளத்தை அறிய அதிகம் படிக்கத்வேவையில்லை.
    காஸா மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு விநியோக மார்க்கத்தையும் தடை செய்துவிட எகிப்தின் எல்லைக் காவலர்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு அததை காஸா மக்களில் தலையில் கட்டிவிட்ட யுயுதர்களை நேசிக்கும் சிறிதரன் போன்றவர்கள் இருக்கும் கட்சியல்லவா உங்களுடையது. பக்கத்திலிருக்கும், ஒன்றாக வாழும் தேவையிருக்கும் முஸ்லிம்களை வெறுப்பார்களாம், எங்கோ இருக்கும் யுயுதர்களை நேசிப்பார்களாம்.
    நன்றாக இருக்கின்றது.
    அடங்குங்கள்.

    ReplyDelete
  5. மடத்தனமான பேச்சு முஸ்லிம்கள் அவ்வளவு இழிச்சவாயர்கள் அல்ல உங்கள்ச்மூகம் செய்தஅடாவடிகள் அட்டூளியங்கள்,மறக்கவேமுடியாது,மறக்கவும்கூடாது,என்ன சொன்னீர் எங்கள்பொடியங்கள்(அன்று),.....வெடகமேஇல்லையா இப்படி வாயைபிபிழக்க

    ReplyDelete
  6. மிஸ்டர் சம்பந்தன் அவர்களே, உன்னிச்சையில் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப் பட்டமை, முஸ்லிம் பெண் கோடரியால் வெட்டப் பட்டமை போன்ற (போர்த்துக்கேயர் காலத்தில் நடைபெற்ற) "மிகப் பழைய" விடையங்களை முஸ்லிம்கள் மறந்து உங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து, காத்தான்குடி பள்ளிவாசல் உட்பட அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தீ வைத்து கொளுத்தி மகிழ்ந்து முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று அறிக்கை விடலாமே!

    (முஸ்லிம்களை அடி மட்டு முட்டாள்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?)

    ReplyDelete

Powered by Blogger.