Header Ads



மஹிந்த அரசாங்கமே முஸ்லிம்களை கௌரவமாக வாழச் செய்துள்ளது - அமைச்சர் றிசாத்

TM

இலங்கை முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற ஓர் அரசாங்கமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு வாணிபத்துறை தொழில் வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் மாத்திரமே முதலமைச்சரை பெறமுடியும். இதனை யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை  தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கிண்ணியா எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கிண்ணியா நகர சபை தலைவரும் கிழக்கு மாகாண சபை  தேர்தல் வேட்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்றுப் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"தலைவர் ரவூப் ஹக்கிமிடம் கேட்டாலும் சரி, தலைவர் அதாவுல்லாவிடம் கேட்டாலும் சரி, பிள்ளையானிடம் கேட்டாலும் சரி அல்லது சம்பந்தன் ஐயாவிடம் கேட்டாலும் சரி இந்த அரசாங்கத்திடமே முதலமைச்சர் ஒருவரை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என கூறுவர். அதிகளவு வாக்குகளை பெறக்கூடிய ஒரு கட்டமைப்பு குறிப்பாக இந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டைப்புக்கு தான் உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என சிந்திக்கும் பலர் எங்களிடத்தில் இருக்கலாம்.

ஆனால் அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியை மாற்றுகின்ற ஒரு தேர்தல் இதுவல்ல. இந்த மாகாண சபை தேர்தல் இது ஒரு குட்டி தேர்தலாகும். ஆளும் கட்சியாக எந்தக் கட்சி உள்ளதோ அந்தக் கட்சிக்கே தான் இந்த சிறிய  தேர்தல்களில் மக்கள் வாக்களித்து வருவதை நாம் காண்கின்றோம். இந்த அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகளில் முஸ்லிம்கள் சார்பாக எங்களுக்கு தனியான இடத்தை வைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இந்நாட்டு முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற ஓர் அரசாங்கமாகும்.

இந்நாட்டில் சில சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஒரு தேரர் தம்புள்ளையில் தலைமை தாங்கி பள்ளிவாசலொன்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அரசில் இருந்து கொண்டு இதற்காக நான் வாயை மூடிக்கொள்ளவில்லை. நான் இது தொடர்பாக ஜனாதிபதியுடனும், அமைச்சரவையிலும் தன்னந்தனியாக குரல் கொடுத்தேன்.

இந்த மாதியான அநியாயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என 52 அமைச்சர்கள் மத்தியிலும் நான் எடுத்து பேசியுள்ளேன். இதை பற்றி நாடாளுமன்றத்தில் யாரும் பேசவில்லை.  இவ்வாறான செயற்பாடுகளை கீழ்த்தரமானவர்கள் செய்வதாக மிக வேதனையோடு சிங்கள உரிமை தலைவராக இருக்கின்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்னிடத்தில் தெரிவித்தார்.

அத்துடன், பாதுகாப்பு செயலாளரிடம் இது தொடர்பாக பலமுறை பேசும் போது தைரியமாக இருந்து செயல்படுமாறு குறிப்பிட்டார். இந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் சரியான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. துணிந்து செயல்பட தைரியமாக பேசுவதற்கு படைத்தவனுக்கு மட்டும் அஞ்சிப் பேசுவதற்கு ஒரு தலைமைத்துவம் தேவையாக உள்ளது" என்றார்.

7 comments:

  1. என்ன சார் நீங்க பேசுறத பாத்தா ஆளும்கட்சி "க" ஓட்டுல ஜெயிச்சிரெல்லாம் எண்ணு இப்போவே முடிவு பண்ணிடிச்சிபோல தெரியுதே அடுத்த முதலமச்சர் பில்லையாந்தானே?

    ReplyDelete
  2. PUBLIC OPINION IS ALWAYS SECRET MAY BE THE CHANCE TO AVOID MC LEADER IF THE LEADER DIRECT FROM EAST THEN THE STORY IS DIFFERENT. OK HAD LOAD OF LOST AS LIVES AND WEALTH DURING PREVIOUS GOVERNMENT BECAUSE THEY DIDN'T FIGHT WITH HOPE TO WIN THE LTTE DESPITE WE LOST AS 60 000 SECURITY FORCES THE REAL VICTORY CAME MAHINDA TIME THEN THE CIVILIANS ARE SAFE THAT IS THE MEANING OK WE HA A LOAD OF DEVELOPMENT AS 60000 INFRASTRUCTURES BRIDGES AND OTHER EMPLOYMENT OPPORTUNITY SO WE DON'T CLOSE THE EYES NALLADIYAAN WE HAVE THANK ALLAH OK RANIL AND HADEES SHOOK HAND WITH HOPE PRABAKARAN MACHCHAAN WHY DID NOT FORCE HIM MUSLIMS GO BACK TO NORTH IS THIS NAME PEACE TNA IS REFUSING ALL SMALL CHANCE FROM GOVERNMENT NOBODY CARE OF THEM WE WORK TOGETHER WITH GOVERNMENT TO ACHIEVING OUR GOAL

    ReplyDelete
  3. thirunthewe mattingepole,,,, nadekketum, nadekketum,,,,

    ReplyDelete
  4. yes we can see how we are living from you . your figure has doubled after you became minister.

    ReplyDelete
  5. அமைச்சரே.! அரசியல் தொழிலாளரே.!

    முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் இயங்குவதற்கு இலங்கையின் நாலா புறங்களிலும் அச்சுறுத்ததல் ஏற்பட்டிருக்கின்றதைப்பற்றி சிறிதளவேனும் அலட்டிக்கொள்ளாத மஹிந்தவின் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் தொழிலை உங்களைப்போன்ற அரசியல் தொழிலாளர்கள் எப்போது கைவிடப்போகின்றீர்கள். உங்களுக்கெல்லாம் வெட்கம் இல்லயா? பதவிக்காகவும், சொகுசுகளுக்காகவும் ஏன் மக்களை விலை பேசி விற்கின்றீர்கள். இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரமாக தமது சமய அணுஷ்டானங்களை முன்னெடுக்க முடியாமல் முட்டுக்கட்டையிடும் பேரினவாதத்திற்கொதிராக எது வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத உதவாக்கரை மஹிந்த அரசாங்கத்தில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று குருட்டுத்தனமாக கருத்துக்களைத் தெரிவித்து மக்களின் வாக்குகளை கொள்ளயடிக்கும் உங்களைப்போன்ற அரசியல் தொழிலாளர்களைப்பற்றி மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? மாற்று அரசியல் ஒழுங்கு குறித்து இலங்கை முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?

    ReplyDelete
  6. mulu poosanikkayayum oru paani sotri puthaittu vittan padu paavi . ivan ellam muslim minister halla? unmai enra inru inru ellorukkuk thelivaaha pahirangamaha nadakkail, evar appadi onru illai, naangal gouramaaha nadatha paduhiromaam? rizad avarhale, gouravam enpathatku ungal moliyil artham thaan enna/ innum ionnum elumbu thundu porukki muslim s ai vilai pesaamal, veen vambukku avanukku vakkalathu vera. etho ungada kathaya paartha goverment election venra maathiriye pechu? enna sootchumum waithullerhal votes kalavaada,unmaiyaana neethiyaana therthal nadanthaal , theriyum makkalin sariyaana neethi um unmaihalum.

    ReplyDelete
  7. RANILIN ARASANKATTIL MUSLIMKALUKKU THAMADU THAI NADE ILLAI ENTRU IRUNTHATHE UNGALUKKU MARANTHU VITTATHA ALI AKBAR? NEENGAL ORU YANAIP PAAHANO?

    ReplyDelete

Powered by Blogger.