சாய்தமருது இப்தாரில் முஸ்லிம் காங்கிரஸின் உள்முரண்பாடுகள் தீர்க்கப்பட்டதாம் (படங்கள்)
கல்முனை நகரபிதா கலாநிதி சிராஸ் மீராசாஹிப்பின் ஏற்பாட்டில் சாய்தமருது கடற்கரையில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான இப்தார் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பயிசல் காசிம் மற்றும் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
கிராத்துடன் இப்தார் நிகழ்வு ஆரம்பமானது. கல்முனை நகரபிதா சிராஸ் மீராசாஹிப் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
வேட்பாளர்களில் சிலர் அங்கு உரையாற்றினர். கட்சி முக்கியஸ்தர்கள் சிலருடையே நிலவிய முரண்பாடுகள் சுமுகமாக தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் ஹக்கீம் அங்கு காரசாரமான உரையொன்றையாற்றினார்.
அடுத்து சாய்ந்தமருதில் கட்சித் தலைவலால் புதிய தேர்தல் அலுவலகமொன்றும் திறந்துவைக்கப்பட்டது.
முன்னதாக நண்பகல் வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் கூட்டம் கூட்டம் கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது. அதில் எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி, கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதி மாநகர மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




ALLAHWAI PAARTHU KOLVOM INTHA BOOMIYIL MIKAVUM ELIMAYAAKAVUM NEERMAYAKAVUM DAAMBEEGAMUM INRI POOLI GAURAVMIRI NERMAYAAKA VAALVOOM VEENVIRAYATHTHAYUM VAYIRU PUDAIKKA UNPATHAYUM THAVIRPOOM THOLUKAYAYUM ZAKAATHTHAYUM NILAINAADDUVOOM POIVAAKKURITHIKALAYUM EMAATTUVATHAYUM THAVIRPOOM MUSLEEMKALUKKUL PAARAPADSHAMINRI NADAPPOOM ENAVETHAAN ALLAN ATHTHAADSHIKALAI KANDU PAYAPPADUVOOM. BURMA SOMALIA PALESTINE SYRIA YEMEN INK ELLAM NADAPPATHI KANDU ALLAHVAI NERATHTHUKKU THOLUVOOM
ReplyDelete