Header Ads



அமெரிக்காவை அச்சுறுத்தும் துப்பாக்கிகள்

 
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் எம்பயர் ஸ்டேட் பில்டிங் அருகில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர்.

நியூயார்க்கின் மிக உயரமான எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் இன்று காலையில் ஊழியர்கள் பரபரப்பாக தங்கள் பணியைக் கொண்டிருந்தனர். தரைத்தளத்தை ஒட்டியுள்ள 5-வது அவென்யூ பகுதியில் காலை 9 மணியளவில் வந்த ஒரு மர்ம ஆசாமி, திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தான். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும் பதிலுக்கு தாக்கினர். இதில் அந்த ஆசாமி உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 3-வது முறையாக அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ஜூலை 20ம் தேதி தியேட்டருக்குள் புகுந்த நபர் 12 பேரை சுட்டுக்கொன்றான். அவனும் தற்கொலை செய்துகொண்டான். ஆகஸ்ட் 5ம் தேதி சீக்கிய கோவிலுக்குள் நுழைந்த ஒரு நபர், 6 சீக்கிய பக்தர்களை சுட்டுக்கொன்றது குறிப்பிடதக்கது.

2 comments:

  1. கொலையாளி முஸ்லிம் பெயர் கொண்டவனாக இல்லாததால், அமெரிக்க போலீசார் அவசர அவசரமாக "இதில் எந்த தீவிரவாத
    அமைப்பிற்கும் தொடர்பில்லை" என அறிவித்து விட்டனர்.

    ReplyDelete
  2. KOLAYAALI MUSLIMAAKA IRUNTHAALUM SAMPAWAM KANDIKKAPPADAWEANDIYATHE.BECAUSE JIHAAD ENRA PEYARIL INRU ISLAAMITTHIN ENNAKKARU MAASU PADUTTHAPPADDULLATHU.

    ReplyDelete

Powered by Blogger.