கம்பளை இல்லவதுரை கிராம இப்தார் நிகழ்வு (படங்கள்)
கம்பளை நகரின் மையப்பகுதியில் சுமார் 600 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் இல்லவதுரை கிராமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுத் மகாவலி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் ஆகும்.
இக்கிராமத்தில் 12.08.2012 ஞாயிற்றுக்கிழமை மஸ்ஜிதுல் ஸலாவில் (23ம் நோன்பு) இப்தார் நிகழ்வு 'இல்லவதுர வாலிப சங்கத்தினால் 'Illwatura Young Men’s Association- IYMA’ 6 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வின் விஷேட அம்சமாக கம்பளை வாழ் மாற்று மத சகோதரர்களும் கம்பளையைச் கங்காராமை விகாராதிபதி, சாலியல விகாரையின் விகாரதிபதி, விஷ்ணு அம்மன் கோயில் குருக்கள் , கம்பளை சாந்த மரியாள் கிரிஸ்தவ ஆலய பாதிரியார் உட்பட கம்பளை உதவி நிதிபதி, சட்டதரணிகள் கம்பளை நகரபிதா பொலிஸ் அதிகாரிகள், வைத்தியர்கள் போன்றோரும் இல்லவதுரை அண்மைய கிராமங்களான ஆண்டியாகடவத்தை. கஹட்டபிடிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் இல்லதுரை பள்ளி நிருவாகிகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம பேச்சாளராக அஷ்ஷேக். அப்பாஸ் நளீமி சிங்கள மொழியில் நோன்பின் அவசியத்தையும் அது எவ்வாறு ஒரு முஸ்லிமை மாற்றி அவனுக்கு பயிற்சிகளை வழங்குகிறது என்ற விடயத்தை மிக அருமையாக விளக்கினார். இக்கூட்டம் இல்லவதுரை வாலிப சங்க தலைவர் மொஹமட் சராபத் தலைமையில் செயலாளர் பொருலாளார் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தகவல் ஆ.சு,பஸ்ருல் அலி (ஆ.யு புவியியல்)




Post a Comment