Header Ads



இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து சிரியா நீக்கப்பட்டது


இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து(ஓ.ஐ.சி.,) சிரியாவை விலக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் மாநாடு, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று கூடுகிறது. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் படி அரபு லீக், சிரியா அரசை வற்புறுத்தி வந்தது. இதை அதிபர் பஷர் அல் ஆசாத் ஏற்காத காரணத்தால், அரபு லீக்கிலிருந்து ஒன்பது மாதங்களுக்கு முன் சிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இது குறித்து ஓ.ஐ.சி.,யின் பொது செயலர் எக்மிலிதின் இக்சானோக்லு குறிப்பிடுகையில்,

"சிரியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத் தனது பிடிவாத போக்கை கைவிட மறுப்பதால், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து சிரியாவை சஸ்பெண்ட் செய்ய, இந்த கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது' என்றார். இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஈரான், இந்த தீர்மானத்தை எதிர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது

3 comments:

  1. சிரியாவை மட்டுமல்ல, ஈரானையும் நீக்க வேண்டும்.
    இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் ஷீயா நாடுகளுக்கு என்ன வேலை?

    ReplyDelete
  2. பலஸ்தீன், மியன்மார் போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான அநியாயங்கள் தினந்தோரும் நடைபெற்று வருகிறது. இவர்களுக்காக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) எதுவும் பேசவில்லை. இந்த கூட்டமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகிக்கின்றது என்று சொல்வதற்கு வெட்கமா இல்லையா? அதுலவேர கிளர்ச்சியாளர்கள்மீது தாக்குதல் நடாத்துவதை நிருத்துமாறு ஒரு கோரிக்கை. பெயர் மட்டும் இஸ்லாம் என்று அழகாய் இருந்து பயனில்லை. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு என்று பெயரை வைத்துக்கொன்டிருக்கும் இந்த அமைப்பு இனியாவது நாள்தோரும் அடி வாங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்காய் குரல் கொடுப்பார்களா???????????

    ReplyDelete
  3. சகோதரர் Arshad, உங்கள் கவலை நீண்ட காலமாக எனக்கும் உள்ளது.

    எதோ பெயரளவில் இருந்தவர்கள், துருக்கியின் தைரியமான எழுச்சியாலும், எகிப்தின் ஆட்சி மாற்றத்தாலும் சற்று இயங்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அதில் ஒரு அபூர்வ நிகழ்வாகத்தான் சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் அண்மைய சில நடவடிக்கைகளை குறிப்பிட முடியும். பாரிய மாற்றங்கள் வர பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.