Header Ads



கிழக்கு தேர்தல் முடிவடையும்வரை அரச நியமனங்கள் வேண்டாம் - கண்டிப்பான உத்தரவு

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் முடியும் வரையில் பொதுச்சேவைகளுக்காக ஆட்சேர்ப்புகள் அனைத்தையும் இடைநிறுத்தும்படி, தேர்தல் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சிறிலங்காவின் பொதுநிர்வாக. உள்நாட்டு விவகார அமைச்சின் செயலர் பிபி அபேகோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகள் என்ற பெயரில் 43 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் நடவடிக்கையில் பொதுநிர்வாக உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் செனிவிரட்ண ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 8ம் நாள் கிழக்கு, வடமத்திய. சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தல் நடந்து முடியும் வரை எல்லா அரசசேவை நியமனங்களையும் இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.