எகிப்தை தாக்குவதற்கு இஸ்ரேலிய ஏவுகணைகள் தயார்
எகிப்து எல்லையோரத்தில் உள்ள இலாத் நகரில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக அன்சார் ஜெருசலேம் என்ற இஸ்லாமிய அமைப்பு, இலாத் நகர் மீது 2 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. மக்கள் வசிக்காத பகுதிகளை, அந்த ஏவுகணைகள் தாக்கியதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதலை அடுத்து இலாத் பகுதியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment