மன்னார் நீதவான் ஜுட்சன் பல்டி அடித்தார்
அமைச்சர் றிஷாத் பதியுதீனை தனக்கு முன் தெரியாததென்றும் தொலைபேசியில் பேசியது அவரது குரலா என்பதும் தனக்குத் தெரியாதென்றும் மன்னார் மஜிஸ்ரேட் நீதவான் அந்தோனிப் பிள்ளை ஜுட்சன் ஆசியன் டிரிபியுனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் முன்னர் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது அமைச்சர் றிசாத்தே அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.
மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை அச்சுறுத்திய வழக்கு திங்களன்று பாணந்துறை நீதவான் திசாநாயக்க மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மன்னார் நீதவான் ஏ.ஜுட்சன் நீதவான் திசாநாயக்க முன்னிலையில் தோன்றி சாட்சியமளித்தார்.
தன்னை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களே தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தியதாகவும், அவரது குரல் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், இதற்கு முன்பும் அவர் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் என்பதால் அவரது குரலை நன்கு அடையாளமம் காணக்கூடியதாக இருந்ததாகவும் நீதவான் ஜுட்சன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டாம் முறையாக அமைச்சர் தன்னை அச்சுறுத்தியபோது, அவர் பேசியதை அந்த நேரம் தனது அருகில் இருந்த சட்டத்தரணிகள் சிலர் கேட்கும்படி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சிஐடியினர் சாட்சியமளிக்கையில் அமைசசர் ரிசாத் பதியுதீன், அவரது சகோதரர், மன்னார் நீதவான் ஜுட்சன் ஆகியோரின் வாக்குமூலங்களைத் தாங்கள் பதிவு செய்திருப்பதாகவும், தமது விசாரணைகளின் மூலம் அமைச்சருடைய சகோதரரே நீதவானுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சிஐடியினர் நீதிமன்றத்திற்கு கையளித்துள்ள விசாரணைகள் தொடர்பான அறிக்கையில் எவரையும் பெயர் குறிப்பிட்டு சந்தேக நபராகக் குறிப்பிடாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய நீதவான் திசாநாயக்க அவர்கள், ஒரு விசாரணை அறிக்கையில் சந்தேக நபர் எவரையும் பெயர் குறித்து குறிப்பிடாமல் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியின் உரிமையாளர் யார் என்பது தெரிந்த பின்பும் ஏன் சந்தேக நபராக எவரையும் அறிக்கையில் சிஐடியினர் குறிப்பிடவில்லை என்றும் நீதவான் கேள்வி எழுப்பினார்.
எமது முன்னைய செய்தி

அப்பாவிப் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தும்படி, பாதாள உலகக் கேடி போல ஒருவன் உத்தரவிட்டானே, அது குறித்து ஏன் இதுவரை ஒரு விசாரணையும் இல்லை?
ReplyDeleteபுலிகளுக்கும், புலி ஆயருக்கும் வால் பிடித்த இந்த அநீதிபதி பெரும் பொய்யனாக இருக்க வேண்டும்.
மன்னார் நிதவானின் அறிக்கை ஒன்றுக்கு ஒன்று முரன்பாடாகவுள்ளது.அமைச்சரை தெரியாது என்றும்,பின்னர் அவர் தான் என்றும் கூறுகிள்றார்.அமைச்ரின் சகோதரர் பேசியதற்கான ஆதரங்கள் இருப்பதாக ரகசிய பொலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளத.அவர் ஜூட்சன் நீதவானை அச்சுறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மன்னார நிதவானை அச்சுறுத்தியது அமைச்சர றிசாத் என்றே ஜூட்சன் முறைப்பாடு செய்துள்ளதாதல் வேறு ஒருவரை எவ்வாறு கைது செய்வது என்று சி.ஜ.டியினர் பதில் நீதவான் திசாநாயக்கவிடம் கேட்டுள்ளனர்.
ReplyDeleteஅதே வேளை சட்டமா அதிபர் அலுவலமும்,அமைச்சர றிசாதுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதை கூறியுள்ள நிலையில்,மீண்டும் அமைச்சர் றிசாத் குற்றவாளி என்று எவ்வாறு பதில் நிதவான் கூறமுடியும. என சட்டத்தரணிகள் மன்னார் நிதுிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மன்னார் முன்னால் நிதவான் ஜூட்சனின் தொலைபேசி அழைப்பு பட்டியல் பரிசீலனைக்குட்படுத்திய போது,பல அரசியல் வாதிகள் அவருடன்,கதைத்துள்ளதும்,மதத் தலைவர்களும் அவருடன் நீண்ட நேரம் பேசியுள்ள விடயங்கள் பதிவாகியுள்ளது குறித்தும் தகவல்கள் கூறுவதான அறியமுடிகின்றது.
அப்படியாயின் ஒரு நீதவான் எவ்வாறு இந்த அரசியல் வாதிகளுடன் கதைக்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது.
அதே வேளை இரகசிய பொலீஸார் பதில் நீதவானிடம் தெரிவித்த சாட்சியங்கள்,எவ்வாறு ஊடகங்களுக்கு சென்றது.அதில் பெயர்கள் குறிப்பிட்டவர்கர்கள் இன்னும் குற்றவாளிகாளக இல்லாத நிலையில் ..எனவே சட்டமே சட்டத்ததை அவமதிக்கும் போது அப்பாவழி மீனவர்கள் தமது நியாயத்துக்காக போரடியது குற்றம் என்று கருத முடியுமா ?
அதே வேளை நீதி மன்றம் தாக்கப்பட்டதாக செய்தி வெளியான போது,அது இன்னும் உத்தியோகபூர்வ கட்டிடமாக இயங்கவில்லை என்றும்,இன்று தான் அது நிதமன்ற கட்டிடமாக பிரகடனப்படுத்தப்பட்டு(2012.08.14) திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jood aayarin SON athanaalthan avar joodson aagum. uppukulam musligalukku sonthamillai enru koorumalavukku maannar aayarukku thimir pidiththuvittathu. aayar mannarin sagala vidayangalilum thalai eedu seivathu naam arinthathe, 1990 piragau velai vaaippugal kudiyetrangal, ponra pala VIDAYANGALAI KOORALAM. 1990 piragu mannar townil nagarasabaikku sonthamana idaththil satta virotha thevalaiyam kattiyathu innum ithe maathiri vidayangal.
ReplyDeleteமுன்னுக்கு பின் முரண்பட்டு கருத்துரைக்கும் மன்னார் ஜஜ் அய்யா (தலையை விட்டிருப்பாரோ) பாதிக்கப்படப்போவது என்னமோ மன்னார் முஸ்லிம்களே! பாவம் அப்பாவிகள்.
ReplyDelete