Header Ads



அமைச்சர் அதாவுல்லாவின் மற்றுமொரு கண்டுபிடிப்பு..!

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு  அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்குரிய சதித்திட்டத்திற்கு துணை போகுமென தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

நிந்தவூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் பேசுகையில்,

பிராந்தியத்தில் இனவாதத்தை தூண்டி, நாட்டில் பிரச்சினையை தோற்றுவித்து அதன் மூலம் மாகாண சபை தேர்தலில் வாக்குகளை வேட்டையாட சில சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கு மக்கள் ஒருபோதும் துணைபோகக் கூடாது எனக் கூறினார்.

4 comments:

  1. cute கோமாளி

    ReplyDelete
  2. இதனை அதாவுல்லாவின் கண்டுபிடிப்பு எனக் கூறி முழுப் பழியையும் அதாவுல்லா மீது போட முயல்வது சரியல்ல.

    ரவூப் ஹக்கீமின் கடந்தகால, அண்மைக்கால செயல்பாடுகள், மேற்படி வடக்குக் கிழக்கு இணைப்பு விவகாரத்தில் சந்தேகமானவையாகவே உள்ளன.

    புலிகளுடன் சுண்டல் சுற்றிய காகிதத்தில் ஒப்பந்தம், பிரபாகரனுடன் ஆட்டு பிரியாணி சாப்பாடு, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நெருங்கிய நட்பு என்பவற்றுக்கும் மேலாக, இதுவரை வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்த்து பகிரங்கமாக இவ்வித உத்தியோக பூர்வ அறிக்கையும் வெளியிடாமை என்பவற்றையும் கூர்ந்து நோக்க வேண்டும்.



    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்தால்???

    ReplyDelete
  3. இவன் மேல தப்பில்ல இவனுக்கு வாக்கு அழிக்கிற முட்டாள்களின் தப்பு. தனது இருப்பை தக்க வைக்க முஸ்லிம்களை அடமானம் வைத்து அபிவிருத்தி என்ற மாயை மூலமும் பிரதேச வாத கருத்துகள் மூலமும் முஸ்லிம்களின் ஒற்றுமையையும் பலத்தினையும் அழித்துக் கொண்டிருக்கிறான்,.

    ReplyDelete
  4. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு உண்டு

    ReplyDelete

Powered by Blogger.