Header Ads



ஹக்கீம் வாகனம் மீது கல்வீச்சு - திரண்டுவந்த மக்கள் உதுமாலெப்பையின் அலுவலகத்திற்கு தாக்குதல்

TM

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு ஏழு மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் வேட்பாளரின் தேர்தல் காரியாலயமொன்று இன்று இரவு எதிர்க்கட்சி காரர்களினால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதோடு, மற்றொரு காரியாலயம் தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது.

 கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் தேர்தல் காரியாலங்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டன.

 நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இக்காரியாலயத்தினைத் தாக்கி தளபாடங்களை சேதமாக்கியதோடு, அங்கிருந்த இரண்டு வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

 சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் இராணுவர்தினர் வருகை தந்ததோடு, தாக்குதலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.  ஏவ்வாறாயினும் நிலைமை தற்போது – கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த இப்தார் நிகழ்வினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஹக்கீம் வானத்தின் மீது முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்னாள் வைத்து கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்தே அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

5 comments:

  1. நோன்புகாலத்தில் அநியாயம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் அல்ல மனித உருவில் நடமாடும் மிருகங்கள் காடையர்கள்

    ReplyDelete
  2. நோன்பு காலத்திலும் ஒருவரை ஒருவர் தாக்குதவதில் முஸ்லிம்களின் வீரம்?????.
    ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம், அரசியல் வாதிக்கு வாக்கு வேட்டை.

    ReplyDelete
  3. YAA ALLAH UMATHU UMATHIN ILAI PADU KEWALAM EW ULAHIL YAA ALLAH UNATHU MUMATHAI KAPATHUWAYAHA

    ReplyDelete
  4. ஆம் இவர்கள் புடித்த நோபிள் பலன் இல்லை பாவதாளிகள் பொறுமை இல்லையா

    ReplyDelete
  5. அடாவடித்தனம் புரியும் காடையர்களுக்கு மக்கள் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.