அம்பாறையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பாழடைவதற்கு அமைச்சர் அதாவுல்லா காரணமா..?
அஸ்ரப் ஏ. ஸமத்
அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் கடந்த பொதுத் தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் மற்றும் அவரது மகன் அமாண் அஸ்ரப் ஆகியோர்களை கூட அக்கரைப்பற்றுக்கு வரவிடாமல் அவரது இரண்டு வாகாணங்களையும் அடித்து சேதமாக்கினார்கள். அவர் வரஇருந்த அக்கரைப்பற்றில் உள்ளவீட்டுக்கும் கல்விச்சி அன்று அக்கரைப்பற்று நகரில் இருந்து பேரியல் அஸ்ரபையும் அவருடன் வந்த வாகனங்களையும் திருப்பி அம்பாறைக்கு அனுப்பினார்கள்.
இது அதாவுல்லாவின் கோட்டை இங்கு அதாவுல்லாவைத் தவிர வேறு யாரும் வரமுடியாது என அவரது ஆதரவாளர்கள் சொல்லி முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஊடகத்துக்கு பொறுப்பாக இருந்த எனது வாகனத்தின் கண்னாடிகளையும் நொருக்கி எனது வீடியோ கமராவையும் பறிக்க முற்பட்டார்கள். அவ்விடத்தில் இருந்த விசேட அதிரப்படையினர் பாதுகாப்பளித்து அம்பாறைக்கு கூட்டிச் சென்றனர்.
அன்று அமைச்சர் பேரியல் அஸ்ரபுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் சுலைமாலெப்பை, வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் ரபீக். சட்டத்தரணி யாசீன், ஆகியோரும் வந்திருந்தனர் அன்று அக்கரைப்பற்று பிரதேச சபையில் நுஆ கட்சி உறுப்பினர்கள் 3 பேர் அங்கம் வகித்தனர் அவர்களது அழைப்பின் பேரிலேயே அமைச்சர் அங்கு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பேரியல் அஸ்ரப் தனது சொந்தப் பணத்தில் அமைச்சுக்குரிய வாகனத்தை திருத்திக் கொடுத்திருந்தார்.
இந் நிகழ்வினை அன்று வெளிவந்த சகல பத்திரிகைகளிலும் முன்பக்கத்தில் செய்தி தலைப்பிட்டு வெளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்றுதான் அமைச்சர் பேரியல் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி வீடமைப்புத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும்போது இக் காணி எனது அக்கரைப்பற்றுக்குள் உள்ளது. இங்கு பேரியல் வரமுடியாது என தடுத்து நிறுத்தும் படி அன்று அடிக்கல் நடும் வேலை அதாவுல்லா அமைச்சரின் கட்சியின் தீகவாபிக்கு பொறுப்பாக இருந்த இணைப்பாளரும் அட்டாளைச் சேனை பிரதே சபை உறுப்பினர் குமார என்பவர் திகவாபி பௌத்த குருக்களுடன் வந்து குழப்பினார். இந்நிகழ்வுக்கு அதாவுல்லா அமைச்சர் மட்டும் வந்தால் இங்கு அடிக்கல் நாட்ட விடுவோம் என்று அன்று தெரிவித்தா
இந் நிகழ்வினாலேயே சிகல உறுமய மற்றும் அன்று எதிர்கட்சியில் இருந்த தயாரத்தின் போன்றோர் இத் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த நடு வீதியில் சவுதி அரேபியாவின் தூதுவரை வரவிடாமல் வழிமறித்தனர்.
இந் நிகழ்வு பெரிதாகி சிகல உறுமய உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்து 300 கோடி ருபாவுக்கு நிர்மாணிக்கப்பட்ட இத் திட்டம் இன்று பாழடைந்து நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்து கிடக்கின்றது.
முக்கிய குறிப்பு
எமது இணையத்தில் அமைச்சர் அதாவுல்லா தொடர்பில் வாசகர்கள் வெளிப்படுத்தியுள்ள சில குறிப்புகள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் வெளிப்படுத்தியுள்ள கூற்றுகள் தொடர்பில் அமைச்சர் அதாவுல்லாவை நாம் தொடர்புகொண்டு அதுதொடர்பில் கருத்துக்களை பெறமுயன்றபோதும் அது பயனளிக்கவில்லை.
எமது இணையத்தில் அமைச்சர் அதாவுல்லா தொடர்பில் வாசகர்கள் வெளிப்படுத்தியுள்ள சில குறிப்புகள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் வெளிப்படுத்தியுள்ள கூற்றுகள் தொடர்பில் அமைச்சர் அதாவுல்லாவை நாம் தொடர்புகொண்டு அதுதொடர்பில் கருத்துக்களை பெறமுயன்றபோதும் அது பயனளிக்கவில்லை.

yar unmaiyana arasiyalvathi enru thariyamal irukku ellaruma tan pokkadokaka kouthadunm nadikarkal
ReplyDeleteபதுவாக்கள் பல காத்திருக்கின்றந.
ReplyDeleteசுனாமி இப்பிரதேச மக்களை துயரத்தில் ஆள்த்திச்சென்று தகட்டுக்குடில்களில் இருக்கும் மக்களின் வதுவா கொந்துராத்தில் கோட்டை கட்டி வாழும் அதாவுல்லாவை சும்மா விடாது
ReplyDeleteஊர் சண்டித்தனம் எத்தனை நாளைக்கி கைகொடுக்கும் இவறுக்கு??? பாழடையும் வீடுகள் போல் தன் அரசியலையும் பாழடையவைக்க அவர் அவர் செயட்பாடுகளே துணைபுறியும் நூனலும் தன்வாயால் கெடும் என்பதுபோன்றே அதாவுல்லாஹ்வின் செயட்பாடுகள் அமைந்துகொண்டிருக்கின்றன
ReplyDeleteநன்றி சமத் . எனது மனகுமுரளும் இதுதான் ,இதை நீங்கள் இந்தத்தருணத்தில் கூறி இருப்பது நல்லதுதான்.
ReplyDeleteவாய் இருக்கு என்று வாய்க்கு வந்த படியெல்லாம் பேசலாமா ? FASHLIN MOHAMMEDசொலைகாட்டு பொம்மை போல் இருந்து கொண்டு
ReplyDeleteஅறிக்கைகள் மாத்திரம் விட்டவண்ணம் இருக்கும் ஹக்கீமை பற்றி பெரிசாக பேச ஒன்றும் இல்லை இத்தவரைகும்
முஸ்லிம் மக்களுக்கு என்று எதுவும் செய்துள்ளானா ?
அன்புள்ள அக்கரைப்பற்று மக்களேய் . அமைச்சர் அதாவுல்லா இறைவனை மறந்த நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் . பதவி ,பட்டம் , அரசியல் , இவைகள்தான் வாழ்க்கை என்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் இறைவன் இவர்களை காப்பாற்ற வேண்டும் ....
ReplyDelete